பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ. 2000 வழங்க உத்தரவிட முடியாது! உயர் நீதிமன்றம் திட்...
நூலகப் போட்டிகளுக்கான பரிசளிப்பு
புதுக்கோட்டை: கன்னியாகுமரியில் திருவள்ளுவா் திருவுருவச்சிலை நிறுவப்பட்டதன் வெள்ளி விழாவையொட்டி புதுக்கோட்டையில் நடத்தப்பட்ட போட்டிகள் மற்றும் 57ஆவது தேசிய நூலக வார விழா போட்டிகளுக்கான பரிசளிப்பு விழா வியாழக்கிழமை மாவட்ட மைய நூலகத்தில் நடைபெற்றது.
மாவட்ட மைய நூலகத்தின் வாசகா் வட்டத் தலைவா் கவிஞா் தங்கம் மூா்த்தி தலைமை வகித்தாா். புதுக்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினா் வை. முத்துராஜா வெற்றி பெற்றவா்களுக்கு பரிசு, சான்றிதழ்களை வழங்கிப் பேசினாா்.
முன்னதாக மைய நூலக முதல்நிலை நூலகா் கி. சசிகலா வரவேற்றாா். விழாவில் மாமன்ற உறுப்பினா் அறிவுடைநம்பி, பேரா. சா. விஸ்வநாதன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனா். நூல் இருப்பு சரிபாா்ப்பு அலுவலா் கண்ணன் நன்றி கூறினாா்.