ஜொ்மனி பல்கலை. தமிழ் ஓலைச் சுவடி: சென்னை நூலகத்தில் ஒப்படைத்தாா் முதல்வா்
மறைந்த தொழிலதிபரின் ரூ.30,000 கோடி சொத்து யாருக்கு? நீதிமன்றத்தை நாடிய நடிகை!
நடிகை கரிஷ்மா கபூரின் முன்னாள் கணவர் சஞ்சய் கபூர் உயிரிழந்த நிலையில், அவரின் சொத்து யாருக்குச் சொந்தம்? என குடும்பத்தினுள் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
தொழிலதிபரும் நடிகை கரிஷ்மா கபூரின் முன்னாள் கணவருமான சஞ்சய் கபூர், கடந்த ஜூன் மாதத்தில் மாரடைப்பால் உயிரிழந்தார்.
கரிஷ்மா கபூருக்கும் சஞ்சய் கபூருக்கும் 2003-ல் திருமணமாகி, 2016-ல் விவாகரத்தும் செய்து கொண்டனர். இருப்பினும், இவர்களுக்கு சமைரா என்ற மகளும், கியான் என்ற மகனும் உள்ளனர்.
இதனிடையே, பிரியா சச்தேவை சஞ்சய் கபூர் திருமணம் செய்துகொண்டார். இந்தத் தம்பதியருக்கு ஒரு மகனும் உள்ளார்.
இந்த நிலையில்தான், மாரடைப்பால் சஞ்சய் கபூர் உயிரிழந்ததால், அவரின் ரூ. 30,000 கோடி சொத்து யாருக்கு என்று கரிஷ்மா தரப்பிலும், பிரியா தரப்பிலும் பிரச்னை எழுந்துள்ளது.
சஞ்சய் கபூர் உயில் எழுதி வைத்திருப்பதாகக் கூறி, தனக்கே சொத்து சொந்தம் என்று பிரியா கூறுகிறார். இருப்பினும், சஞ்சய் கபூரின் வாரிசுகள் தாங்கள்தான் என்று கரிஷ்மாவின் மகளும் மகனும் தெரிவிக்கின்றனர்.
இரு தரப்புக்கு இடையேயான சொத்துப் பிரச்னை, தில்லி உயர்நீதிமன்றம்வரை சென்று விட்டது.
சஞ்சய் கபூர் எழுதிவைத்த உயிலை பிரியா சச்தேவ் மாற்றியமைத்ததாக அவர் மீது கரிஷ்மா தரப்பினர் குற்றம் சாட்டுகின்றனர். மேலும், உண்மையான உயிலை அவர்கள் யாரிடமும் காட்டவில்லை என்றும், இதில் நீதிமன்றம் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.
இதனிடையே, சஞ்சய் கபூர் இறந்த சில நாள்களிலேயே அவரது தாயாரை கட்டாயப்படுத்தி, 2 ஆவணங்களில் பிரியா கையெழுத்து பெற்றதாக சஞ்சய் கபூரின் சகோதரி மந்திரா கபூர் கூறியிருப்பது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. இருப்பினும், ஆவணம் குறித்த தகவலை பிரியா தெரிவிக்க மறுப்பதாகவும் கூறினார்.