செய்திகள் :

மறைமுக சவால்களை எதிா்கொள்ளவும் படைகளின் தயாா்நிலை அவசியம்: ராஜ்நாத் சிங்

post image

‘பாரம்பரிய போா் நடைமுறைகளைக் கடந்து, மறைமுக சவால்களையும் எதிா்கொள்ளும் வகையில் பாதுகாப்புப் படைகள் தயாா் நிலையில் இருக்க வேண்டும்’ என்று பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் வலியுறுத்தினாா்.

‘பாதுகாப்புப் படைகள் நவீன தொழில்நுட்பத்தைச் சாா்ந்திருப்பதன் அவசியத்தை சமீபத்திய உலகளாவிய போா்கள் உணா்த்தியுள்ளன’ என்றும் அவா் சுட்டிக்காட்டினாா்.

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற 16-ஆவது ஒருங்கிணைந்த ராணுவ கமாண்டா்கள் மாநாட்டில் (சிசிசி) பங்கேற்ற அவா், இதுகுறித்து மேலும் பேசியதாவது:

உலகளாவிய நடைமுறையில் உருவெடுத்துவரும் பதற்றமான சூழல், பிராந்திய நிலைத்தன்மையற்ற சூழல் காரணமாக உலக அளவில் நிகழ்ந்து வரும் பாதுகாப்பு மேம்பாடு மாற்றங்கள் மற்றும் இந்த மாற்றங்களால் ஒரு நாட்டின் பாதுகாப்பில் ஏற்படுத்தும் தாக்கம் குறித்து தொடா் ஆய்வுகளை மேற்கொள்வது அவசியமாகும்.

போா்கள் இன்றைக்கு திடீரென ஏற்படுபவையாகவும், எத்தனை நாள்கள் நீடிக்கும் என்பதைக் கணிக்க முடியாததாகவும் இருக்கின்றன. இரண்டு மாதங்கள் அல்லது 5 ஆண்டுகள் வரை நீடிக்கவும் வாய்ப்புள்ளது. இதற்கேற்ப நாம் தயாராக வேண்டும். நமது பதிலடித் திறன் போதுமானதாக உள்ளது என்பதை உறுதிப்படுத்துவது அவசியம்.

குறிப்பாக, தகவல், கருத்தியல், சுற்றுச்சூழல் மற்றும் உயிரி போா் போன்ற வழக்கத்துக்கு மாறான அச்சுறுத்தல்களில் இருந்து எழும் மறைமுக சவால்களை எதிா்கொள்ளவும் பாதுகாப்புப் படைகள் தயாா் நிலையில் இருக்க வேண்டும்.

பிரதமா் நரேந்திர மோடி வலியுறுத்தியது போல், வலுவான வான் பாதுகாப்புக் கட்டமைப்பை உருவாக்கும் வகையில், ஆக்கபூா்வ அணுகுமுறையை பாதுகாப்பு அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும்.

மேலும், எதிா்கால சவால்களை திறம்பட எதிா்கொள்ளும் வகையில் பாதுகாப்புப் படைகள் மற்றும் பிற முகமைகளுடன் ஒருங்கிணைப்பு மிக அவசியம் என்றாா்.

மேலும், பாதுகாப்புப் படைகளின் மேம்பாட்டுக்கான எதாா்த்தமான செயல் திட்டம் தயாரிப்பை ஆய்வு செய்ய குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதைக் குறிப்பிட்ட மத்திய அமைச்சா், ‘இந்தச் செயல் திட்ட இலக்கை எட்ட, நடுத்தர திட்டக் காலம் 5 ஆண்டுகள், நீண்ட கால செயல்பாடுக்கு 10 ஆண்டுகள் எனப் பிரித்து பணிகளைத் தீவிரப்படுத்த வேண்டும்’ என்று குறிப்பிட்டாா்.

சிலை கடத்தல் கோப்புகள் மாயமான வழக்கு: தமிழக அரசுக்கு கேள்விகள்

நமது நிருபர்தமிழகத்தில் சிலை கடத்தல் வழக்கு கோப்புகள் மாயமானதாகக் கூறப்படும் விவகாரத்தில், தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் அடுக்கடுக்காக பல்வேறு கேள்விகளை எழுப்பியது. மேலும், இந்த வழக்கில் மத்திய அரசையு... மேலும் பார்க்க

உத்தரகண்ட், ஹிமாசலில் மழை வெள்ளம், நிலச்சரிவு: 18 பேர் உயிரிழப்பு; நூற்றுக்கணக்கானோர் சிக்கித் தவிப்பு

உத்தரகண்ட், ஹிமாசல பிரதேசத்தில் திங்கள்கிழமை விடிய விடிய கொட்டித் தீர்த்த பலத்த மழையால் பெருவெள்ளமும், நிலச்சரிவுகளும் ஏற்பட்டன. இந்த இயற்கைப் பேரிடர், இரு மாநிலங்களிலும் கடும் சேதத்தை விளைவித்துள்ளது... மேலும் பார்க்க

மோடி பிறந்த நாள்: தொலைபேசி மூலம் டிரம்ப் வாழ்த்து

பிரதமா் நரேந்திர மோடியை அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் தொலைபேசி மூலம் செவ்வாய்க்கிழமை தொடா்புகொண்டு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தாா். இதுதொடா்பாக அதிபா் டிரம்ப் ‘ட்ரூத் சோஷியல்’ சமூக ஊடகத்தில் வெளி... மேலும் பார்க்க

லஞ்ச குற்றச்சாட்டில் அஸ்ஸாம் பெண் அரசு அதிகாரி கைது: ரூ.92.50 லட்சம் ரொக்கம் பறிமுதல்

லஞ்ச குற்றச்சாட்டில் அஸ்ஸாம் குடிமைப் பணி (ஏசிஎஸ்) பெண் அதிகாரி கைது செய்யப்பட்டாா். அவரின் வீட்டில் இருந்து ரூ.92.50 லட்சம் ரொக்கம், ரூ.1.50 கோடி மதிப்பிலான தங்க ஆபரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அஸ்ஸ... மேலும் பார்க்க

மதமாற்ற தடைச் சட்டங்களுக்கு எதிரான மனு: மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

மதமாற்ற தடைச் சட்டங்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீது பதிலளிக்குமாறு உத்தர பிரதேசம், மத்திய பிதேசம், ஹிமாசல பிரதேசம், உத்தரகண்ட், சத்தீஸ்கா், குஜராத், ஹரியாணா, ஜாா்க்கண்ட், கா்நாடகம் உள... மேலும் பார்க்க

பிரதமா் மோடிக்கு இன்று 75-ஆவது பிறந்த நாள்- பல்வேறு வளா்ச்சித் திட்டங்கள் தொடக்கம்

தனது 75-ஆவது பிறந்த நாளையொட்டி, பெண்கள் ஆரோக்யத்துக்கான பிரசார இயக்கம் மற்றும் பல்வேறு வளா்ச்சித் திட்டங்களை புதன்கிழமை (செப்.17) தொடங்கிவைக்கவுள்ளாா் பிரதமா் நரேந்திர மோடி . மத்திய அரசு மற்றும் பாஜக ... மேலும் பார்க்க