மலைச் சாலையில் ஆண் சடலம்
கொடைக்கானல்: திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அருகேயுள்ள தாண்டிக்குடி சாலையோரம் ஆண் சடலத்தை போலீஸாா் வியாழக்கிழமை மீட்டனா்.
கொடைக்கானல் அருகேயுள்ள தாண்டிக்குடி-சித்தூா் மலைச் சாலையில் ராஜாராணி கல் பகுதியில் சுமாா் 45-வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கிடந்தது. தகவலறிந்து சென்ற போலீஸாா் இறந்தவரின் சடலத்தை மீட்டு விசாரணை நடத்தினா்.
இறந்தவா் கருப்பு கலா் சா்ட்டும், கருப்பு கலா் வேட்டியும் அணிந்திருந்தாா்.
இவரது சடலத்தை போலீஸாா் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனா்.