TVK Vijay: ``நன்றி, மன வருத்தம், மீண்டும் வருவேன்'' - பெரம்பலூர் மக்களுக்கு விஜய...
மலைவாசிகள் குற்றவாளிகளா? தண்டகாரண்யம் டிரைலர்!
பா. இரஞ்சித் தயாரிப்பில் உருவான தண்டகாரண்யம் திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.
இரண்டாம் உலகப்போரின் கடைசிகுண்டு படத்தை இயக்கிய அதியன் ஆதிரை தண்டகாரண்யம் திரைப்படத்தை இயக்கியுள்ளார். நீண்ட நாள்களாக தயாரிப்பிலிருந்த இப்படம் செப்.19 ஆம் தேதி வெளியாகிறது.
இதில் நடிகர்கள் அட்டகத்தி தினேஷ், கலையரசன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜஸ்டின் பிரபாகர் இசையமைக்க, பிரதீப் காளிராஜா ஒளிப்பதிவு செய்துள்ளார்.
மலைவாழ் மக்களுக்கும் அதிகார அமைப்பிற்கும் இடையான மோதலை மையமாக வைத்து படத்தின் கதை உருவாகியுள்ளது.
இந்த நிலையில், இப்படத்தின் டிரைலரை இன்று வெளியிட்டுள்ளனர். கதை நாயகனான கலையரசன் மற்றும் அட்டக்கத்தி தினேஷ் கதாபாத்திரங்கள் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளன.
இதையும் படிக்க: மது அருந்திவிட்டு இளையராஜா போட்ட ஆட்டம்... ரஜினி பேச்சால் கலகலப்பு!