செய்திகள் :

மல்லிகார்ஜுன கார்கேவின் உடல்நலம் குறித்து விசாரித்த பிரதமர் மோடி!

post image

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் உடல்நலம் குறித்து தொலைபேசி மூலமாக பிரதமர் மோடி நலம் விசாரித்துள்ளார்.

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உடல்நலக் குறைவு காரணமாக பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று(அக். 1) காலை அனுமதிக்கப்பட்டார்.

கார்கே இதயத்தில் பேஸ்மேக்கர் பொருத்த வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதாகவும் அறுவைச் சிகிச்சைக்காக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கார்கேவின் மகனும் கர்நாடக அமைச்சருமான பிரியங்க் கார்கே கூறியிருந்தார்.

இதையடுத்து அரசியல் கட்சித் தலைவர்கள் அவரது உடல்நலம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

பிரதமர் நரேந்திர மோடி, கார்கேவை தொலைபேசியில் தொடர்புகொண்டு அவரது உடல்நலம் குறித்து விசாரித்துள்ளார்.

தனது எக்ஸ் பக்கத்தில் இத்தகவலைத் தெரிவித்துள்ள மோடி, கார்கே நீண்ட காலம் நல்ல உடல்நலத்துடன் வாழ வேண்டும் என்று பிரார்த்திப்பதாகவும் கூறியுள்ளார்.

Prime Minister Modi has inquired about the health of Congress leader Mallikarjun Kharge over the phone.

எனக்கு நோபல் பரிசு கொடுக்கவில்லை எனில் அது அமெரிக்காவுக்கே அவமானம்! - டிரம்ப்

தசரா: பரேலியில் ட்ரோன்கள் மூலம் தீவிர கண்காணிப்பு! இணைய சேவைகள் துண்டிப்பு!

உத்தரப் பிரதேசத்தில், தசரா பண்டிகையை முன்னிட்டு பரேலி பிரிவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அடுத்த 48 மணிநேரத்துக்கு இணைய சேவைகள் தற்காலிகமாகத் துண்டிக்கப்பட்டுள்ளது. பரேலி பிரிவில் உள்ள 4 மாவட்டங்களி... மேலும் பார்க்க

குஜராத் எல்லையில் பாகிஸ்தான் ராணுவ கட்டமைப்பு அதிகரிப்பு! ராஜ்நாத் சிங் எச்சரிக்கை

சர்வதேச எல்லையான ‘சர் க்ரீக்’ பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தின் உள்கட்டமைப்பு அதிகரித்து வருவதாக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.மேலும், இந்தியாவுக்கு அச்சுறுத்தல் ஏற்ப... மேலும் பார்க்க

வாட்ஸ்ஆப் vs அரட்டை! அதீத வரவேற்பைப் பெறுகிறது! முதலிடம்!!

சமூக வலைத்தளங்களில் அதிகம் பேரால், அதிகம் பயன்படுத்தப்படும் வாட்ஸ்ஆப் செயலிக்கு போட்டியாக, இந்தியாவில் தயாரிக்கப்பட்டு ஆப் ஸ்டோரில் களமிறக்கப்பட்டிருக்கும் அரட்டை செயலி, அதிகம் பேரால் பதிவிறக்கம் செய்... மேலும் பார்க்க

ஸுபின் கர்க் மரணத்தில் திடீர் திருப்பம்! ஸ்கூபா டைவிங் போது இறக்கவில்லை!!

அசாம் இசைக் கலைஞர் ஸுபின் கர்க் கடந்த மாதம் சிங்கப்பூரில் மரணமடைந்த நிலையில், அவர் ஸ்கூபா டைவின் செய்தபோது மரணமடையவில்லை என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.அஸ்ஸாமி, ஹிந்தி உள்பட 40 மொழிகளில் ம... மேலும் பார்க்க

காந்தி பாதையைத் தொடர்ந்து பின்பற்றுவோம்! மோடி

மகாத்மா காந்தியின் பாதையைத் தொடர்ந்து பின்பற்றுவோம் என்று பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.நாடு முழுவதும் காந்தியின் பிறந்தநாளான இன்று ’காந்தி ஜெயந்தி’ விழா கொண்டாடப்பட்டு வருகின்றத... மேலும் பார்க்க

நாக்பூரில் ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு நிறைவு விழா! ராம்நாத் கோவிந்த பங்கேற்பு!

நாக்பூரில் ராஷ்ட்ரிய சுயம்சேவக் சங்கத்தின் (ஆர்எஸ்எஸ்) நூற்றாண்டு நிறைவு விழாவில் முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கலந்துகொண்டுள்ளார்.கடந்த 1925 ஆம் ஆண்டு விஜயதசமி நாளன்று ஆர்எஸ்எஸ் அமைப்ப... மேலும் பார்க்க