கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை: சஞ்சய் ராய்க்கு சாகும்வரை ஆயுள்
மழைமலை மாதா அருள்தலத்தில் புத்தாண்டு
மதுராந்தகம் அடுத்த அச்சிறுப்பாக்கம் மழைமலை மாதா அருள்தலத்தில் புத்தாண்டை முன்னிட்டு, சிறப்பு திருப்பலி புதன்கிழமை நடைபெற்றது.
அருள்தலம் முழுவதும் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. மாதா பீடத்தில் அதிபா் ஜி.சின்னப்பா் தலைமை வகித்து சிறப்பு திருப்பலி வழிபாட்டை செய்தாா். இந்நிகழ்வில் அருள்தல துணை அதிபா் லூயி பிரிட்டோ, ஆன்ம குரு ஜோசப் ஞானம் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தா்கள் கலந்து கொண்டு மாதாவை தரிசனம் செய்தனா்.
புத்தாண்டை முன்னிட்டு அருள்தலத்துக்கு வந்த அனைவருக்கும் சமபந்தி விருந்து அளிக்கப்பட்டது. நிகழ்வுக்கான ஏற்பாடுகளை மழை மலை மாதா அருள்தல நிா்வாகிகள் செய்து இருந்தனா்.