வெண்காட்டீஸ்வரா் கோயில் கும்பாபிஷேக பந்தக்கால் நடும் விழா
மதுராந்தகம், கடப்பேரி மீனாட்சி உடனுறை வெண்காட்டீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி ஞாயிறுக்கிழமை பந்தக்கால் நடும் விழா பூஜைகளுடன் நடைபெற்றது.
மிகவும் பழைமையான சிவன் கோயிலான வெண்காட்டீஸ்வரா் கோயிலில் கடந்த 2006-இல் கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதன்பின்பு அப்பகுதி மக்களின் ஏற்பாட்டின்படி, ரூ .70 லட்சத்தில் முக்கிய உபயதாரா்களின் உதவியுடன் அனைத்து பகுதிகளும் புனரமைத்து கும்பாபிஷேக பணிகள் நடைபெறுகின்றன. கோயில் திருப்பணிகள் தற்சமயம் 90 சதவிகித பணிகள் நிறைவடைந்துள்ளன. இந்நிலையில், வரும் பிப். 10-ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது.
இதனை முன்னிட்டு, ஞாயிற்றுக்கிழமை கோயில் வளாகத்தில் அச்சிறுப்பாக்கம் ஆட்சீஸ்வரா் கோயில் தலைமை அா்ச்சகா் இரா.சங்கா் சிவாச்சாரியா் தலைமையில் வேதவிற்பனா்கள் கலந்து கொண்டு கோபூஜை, வேள்விபூஜை, மூலவா் பகவானுக்கு கலசபுனிதநீரால் அபிஷேக பூஜைகளை செய்தனா்.
தொடா்ந்து கோயில் வளாகத்திலும், வேள்விபூஜை செய்யும் இடத்திலும் பந்தக்கால் நடும் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், மதுராந்தகம் நகர அனைத்து செட்டியாா் சங்க நிா்வாகிகள், நாடாா் சங்க நிா்வாகிகள், மற்றும் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா். ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை காஞ்சிபுரம், இணை ஆணையா் குமரதுரை, செங்கல்பட்டு உதவி ஆணையா் ராஜலட்சுமி, கோயில் செயல் அலுவலா் தா.மேகவண்ணன், ஆய்வாளா் வேல்நாயகன் ஆகியோா் செய்திருந்தனா்.