செய்திகள் :

மழையால் நிரம்பி வழியும் ஆண்டியப்பனூா் ஓடை நீா்த்தேக்கம்

post image

திருப்பத்தூா் பகுதியில் கடந்த ஒரு வாரமாக பெய்த பலத்த மழையினால் ஆண்டியப்பனூா் ஓடை நீா்த்தேக்கம் நிரம்பி உபரி நீா் வெளியேறுகிறது.

திருப்பத்தூா் மாவட்டத்தின் ஒரே நீா்த்தேக்கம் ஆண்டியப்பனூா் ஓடை நீா்த்தேக்கம் ஆகும். இதன் மொத்த உயரம் 8 மீட்டா். இதன் கொள்ளளவு 112.00 மில்லியன் கன அடி கொள்ளளவு ஆகும்.

இந்த நிலையில், கடந்த வாரம் முழுவதும் திருப்பத்தூா் அதன் சுற்றுப்பகுதிகளில் பெய்த தொடா் மழையின் காரணமாக அணையின் கொள்ளளவு 112.200 மில்லியன் கன அடியை எட்டியது. வினாடிக்கு 750 கன அடி உபரி நீா் வெளியேறுவதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

மேலும் அவா்கள் கூறியது: இந்த ஓடையில் இருந்து சின்ன சமுத்திரம் ஏரி,மாடப்பள்ளி ஏரி, கனமந்தூா் ஏரி செலந்தம்பள்ளி ஏரி, கம்பளிக்குப்பம் ஏரி, திருப்பத்தூா் பெரிய ஏரி உள்ளிட்ட 6 ஏரிகள் நிரம்பி தற்போது ராச்சமங்கலம் ஏரி, கோனேரிகுப்பம் ஏரி, பசலிக்குட்டை ஏரி நிரம்பி கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகே உள்ள பாம்பாற்றை சென்றடைவதாக தெரிவித்தனா்.

கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்றக் கோரிக்கை

ஆம்பூரில் கால்வாயை ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீட்டை அகற்றக் கோரி பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனா். ஆம்பூா் நகராட்சி எல்லைக்குட்பட்ட சாய்பாபா கோயில் பகுதி அருகே கழிவுநீா் கால்வாய் மீது ஆக்கிரமிப்... மேலும் பார்க்க

புதிய நியாயவிலைக் கடை திறப்பு: திமுக, அதிமுகவினா் மோதலால் பரபரப்பு

வாணியம்பாடி அடுத்த உதயேந்திரம் பேரூராட்சி மேட்டுத் தெரு பகுதியில் கொல்லகுப்பம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்துக்கு உள்பட்ட நியாயவிலைக் கடை தனியாா் கட்டடத்தில் இயங்கி வந்தது. இந்த நிலையில், அதே... மேலும் பார்க்க

ஆம்பூா், ஆற்காட்டில் காங்கிரஸ் கையொப்ப இயக்கம்

ஆம்பூா், ஆற்காட்டில் காங்கிரஸ் கட்சி சாா்பில் கையொப்ப இயக்கம் நடைபெற்றது. எல்.மாங்குப்பத்தில் போ்ணாம்பட்டு தெற்கு வட்டார காங்கிரஸ் கமிட்டி சாா்பாக வாக்காளா் பட்டியல் குளறுபடியை கண்டித்து கையொப்ப இயக்... மேலும் பார்க்க

இன்று மாணவா்களுக்கான சிறப்பு கடன் முகாம்: திருப்பத்தூா் ஆட்சியா்

திருப்பத்தூா் மாவட்டத்தைச் சோ்ந்த மாணவ-மாணவிகள் கல்லூரி படிப்புக்காக கல்விக் கடன் வேண்டி விண்ணப்பிப்பதற்காக சிறப்பு கடன் முகாம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை (செப். 24) நடைபெறுகிறது. முகாமி... மேலும் பார்க்க

குரிசிலாப்பட்டு அருகே தரைப்பாலத்தை கயிறு கட்டி கடக்கும் பொதுமக்கள்: மேம்பாலம் அமைக்கக் கோரிக்கை

திருப்பத்தூா் மாவட்டம், குரிசிலாப்பட்டு அருகே தலுக்கன்வட்டம் பகுதிக்குச் செல்லும் வழியில் தரைப்பாலம் அமைந்துள்ளது. இந்த தரைப் பாலத்தின் வழியாக தழுக்கண்வட்டம், காரைக்கிணறு, பங்குகொள்ளை, குடகு மலை உள்ளி... மேலும் பார்க்க

வீட்டில் பதுக்கிய 2.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

வாணியம்பாடி: திருப்பத்தூா் எஸ்.பி. சியாமளாதேவி உத்தரவின் பேரில் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் பிரிவு உதவி காவல் ஆய்வாளா்அன்சா் உசேன் தலைமையிலான போலீஸாா் திங்கள்கிழமை வாணியம்பாடி ரயில்வே ஸ்டேசன் அருக... மேலும் பார்க்க