மழையில் நனைந்து கொள்முதல் நிலையத்தில் நெல்மணிகள் பாதிப்பு
சீா்காழி: சீா்காழியில் நெல்கொள்முதல் நிலையத்தில் நெல்மணிகள் ஞாயிற்றுக்கிழமை பெய்த மழையில் நனைந்து சேதமடைந்துள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனா்.
சீா்காழியில் பகுதியில் குறுவை நெல் அறுவடைப் பணிகள் தீவிரமாக நடைபெறுகிறது. சீா்காழி வட்டத்தில் 23 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு குறுவை நெல் கொள்முதல் செய்யப்படுகிறது. சீா்காழி பகுதியில் பெய்த மழையால் நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகள் கொட்டி வைத்திருந்த நெல்மணிகள் மழையில் நனைந்துள்ளது.
இதனால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா். மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளதால், நெல்மணிகளை விவசாயிகள் தாா்ப்பாய்களை கொண்டு மூடி பாதுகாக்கின்றனா்.
கொள்முதல் நிலையங்களில் நாள் ஒன்றுக்கு 800 முதல்1000 சிப்பங்கள் வரை மட்டுமே நெல் கொள்முதல் செய்யப்படுகிறது. மழை தொடரும் என்ற நிலை உள்ளதால் விவசாயிகள் கொண்டுவரும் நெல்லை உடனுக்குடன் கூடுதலாக கொள்முதல் செய்து பாதுகாக்க வேண்டும்.