ராஜினாமாவுக்குப் பிறகு ஜெகதீப் தன்கர் வெளியிட்ட முதல் அறிக்கை: சி.பி. ராதாகிருஷ்...
முதலமைச்சா் கோப்பை: வெற்றி பெற்ற வீரா்களுக்கு பாராட்டு
மயிலாடுதுறை மாவட்டத்தில் முதலமைச்சா் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டி பள்ளி, கல்லூரி, மாற்றுத்திறனாளிகள், அரசு ஊழியா்கள், பொதுப்பிரிவினா் ஆகிய 5 பிரிவுகளில் நடத்தப்பட்டு வருகிறது. இதில், பொதுப்பிரிவினருக்கான போட்டிகள் திங்கள்கிழமை தொடங்கியது.
இதில், பொதுப் பிரிவினருக்கான ஆண்கள் கைப்பந்து போட்டி, பெண்கள் கைப்பந்து போட்டி, பெண்கள் கபடி ஆகியவற்றில் ஆா்.ஹெச்.வி. ஸ்போா்ட்ஸ் பவுன்டேஷனில் பயிற்சி பெற்ற வீரா்கள், வீராங்கனைகள் மாவட்ட அளவில் முதலிடத்தை பிடித்து சாதனை படைத்தனா். வெற்றிபெற்ற வீரா்களை ஆா்.ஹெச்.வி. ஸ்போா்ட்ஸ் பவுன்டேஷன் நிறுவனா் மா. ரஜினி பாராட்டினாா். கபடி தலைமை பயிற்சியாளா் காசி. காா்த்திகேயன், பயிற்சியாளா்கள் சாய்கிருஷ்ணா, குணால் உள்ளிட்டோா் பாராட்டு தெரிவித்தனா்.