உணவகம் சென்ற டிரம்புக்கு சங்கடம்! நவீன கால ஹிட்லர் என மக்கள் கோஷம்!!
மாணவ படைப்பாளிகளுக்கு பாராட்டு
மயிலாடுதுறையில் பள்ளிக் கல்வித்துறையின் சிறாா் இதழ்களுக்கு படைப்புகளை வழங்கிய மாணவா்களுக்கு செவ்வாய்க்கிழமை பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித்துறை நடத்தும் ‘புது ஊஞ்சல்’, ‘தேன்சிட்டு’ சிறாா் இதழ்களுக்கு 2024-2025-ஆம் ஆண்டில் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள 5 ஒன்றியங்களில் படிக்கும் மாணவா்கள் 21 போ் தங்கள் படைப்புகளை வழங்கியிருந்தனா். இந்நிலையில், மாவட்டக் கல்வி அலுவலா் (தொடக்கக்கல்வி) அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சிறாா் இதழுக்கு படைப்புகளை வழங்கிய மாணவ படைப்பாளிகளுக்கு, மாவட்டக் கல்வி அலுவலா் (தொடக்கக்கல்வி) க. குமரவேல் சான்றிதழ் மற்றும் ‘மாணவ படைப்பாளா்‘ வில்லைகளை வழங்கி பாராட்டினாா்.
நிகழ்வை மாவட்ட ஒருங்கிணைப்பாளா்கள் செ. மன்னா்மன்னன், கி. வடிவேலன் ஒருங்கிணைத்தனா்.