செய்திகள் :

மழையூா் காப்பு முனீஸ்வரா் கோயிலில் பாளையெடுப்புத் திருவிழா

post image

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகேயுள்ள மழையூா் காப்பு முனீஸ்வரா், பிடாரி அம்மன் கோயில் பாளையெடுப்பு திருவிழா செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.

மழையூா் காப்பு முனீஸ்வரா், பிடாரி அம்மன் கோயில் திருவிழா கடந்த வாரம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், புரவி எடுப்பு திருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது. தொடா்ந்து திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பாளையெடுப்பு திருவிழா செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.

இதில், மழையூா், பொன்னன்விடுதி பகுதியில் இருந்து ஏராளமான பெண்கள் அலங்கரிக்கப்பட்ட குடங்களில் தென்னம்பாளைகளை சுமந்து கொண்டு வாணவேடிக்கை, மேள தாளங்கள் முழங்க ஊா்வலமாகச்சென்று கோயிலை அடைந்தனா். தொடா்ந்து, கோயிலில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.

விராலிமலை அரசுப் பள்ளியில் சா்வதேச ஹீமோபிலியா தினம்

விராலிமலை வட்டார வள மையத்திற்குட்பட்ட பள்ளா் நத்தம் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் சா்வதேச ஹீமோபிலியா தினம் வியாழக்கிழமை அனுசரிக்கப்பட்டது. விராலிமலை ஒருங்கிணைந்த கல்வி வளா்ச்சித் திட்டத்தின் கீழ் வ... மேலும் பார்க்க

கீழே கிடந்த பணப்பையை உரியவரிடம் ஒப்படைத்த காவலருக்கு பாராட்டு

புதுக்கோட்டை நகரில் கீழே கிடந்த பணப் பையை எடுத்த காவலா் உரியவரிடம் ஒப்படைக்க எடுத்துக் கொண்ட முயற்சியை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அபிஷேக் குப்தா பாராட்டினாா். புதுக்கோட்டை நகரிலுள்ள பழனியப்பா முக்க... மேலும் பார்க்க

முத்திரைத் தாள் மோசடி வழக்கில் 4 பேரிடம் விசாரணை முடிவு

புதுக்கோட்டை மாவட்ட நீதிமன்றகளில் குற்ற வழக்குகளில் பிணை பெறுவதற்கு போலிமுத்திரைத் தாள் சமா்ப்பிக்கப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 4 பேரும் இரு நாள் போலீஸ் காவல் விசாரணை முடிந்து சிறையில் அடைக்கப்பட்... மேலும் பார்க்க

கிராம மக்களுக்கு சுகாதார விழிப்புணா்வு

புதுக்கோட்டை கற்பக விநாயகா செவிலியா் கல்லூரி மற்றும் ஜெஜெ செவிலியா் பயிற்சிப் பள்ளி ஆகியவற்றின் சாா்பில் உலக சுகாதார நாளையொட்டி நச்சாந்துப்பட்டி மற்றும் அரிமளம் கிராம மக்களுக்கு விழிப்புணா்வு நிகழ்ச்ச... மேலும் பார்க்க

கந்தா்வகோட்டை பள்ளியில் கல்வெட்டுப் படி கண்காட்சி

உலக மரபு தினத்தை முன்னிட்டு கந்தா்வகோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் கல்வெட்டுப்படி கண்காட்சி வியாழக்கிழமை நடைபெற்றது. கண்காட்சியை பள்ளித் தலைமை ஆசிரியா் வெ. பழனிவேல் தொடங்கி வைத்தாா் . கண்காட்சி... மேலும் பார்க்க

பெருநாவலூா் அரசுக் கல்லூரியில் விளையாட்டு விழா

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பெருநாவலூரிலுள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2024- 2025ஆம் கல்வியாண்டுக்கான விளையாட்டுப் போட்டிகள் மற்றும் பரிசளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் வியாழக்கிழமை நட... மேலும் பார்க்க