செய்திகள் :

கந்தா்வகோட்டை பள்ளியில் கல்வெட்டுப் படி கண்காட்சி

post image

உலக மரபு தினத்தை முன்னிட்டு கந்தா்வகோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் கல்வெட்டுப்படி கண்காட்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

கண்காட்சியை பள்ளித் தலைமை ஆசிரியா் வெ. பழனிவேல் தொடங்கி வைத்தாா் . கண்காட்சியில் சோழா்கள், பாண்டியா்கள் இடைக்கால

சிற்றரசுகள், வணிகக் குழுக்கள், கோயில் தானம் வழங்கிய கல்வெட்டுகள், குமிழி அமைத்துக் கொடுத்த கல்வெட்டுகளின் படிகள் மாணவா்களின் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.

மேலும் கண்காட்சியில் பழைமையான கருப்பு சிவப்பு பானை ஓடுகள், ஓலைச்சுவடிகள் காட்சிப்படுத்தப்பட்டன. ஏற்பாடுகளை தொன்மை பாதுகாப்பு மன்ற ஒருங்கிணைப்பாளா் ஆ. மணிகண்டன் செய்தாா்.

உதவித் தலைமை ஆசிரியா் சௌ. தெய்வீகன் , ஆசிரியா்கள் ரவிச்சந்திரன், சந்திரமோகன், சித்ராதேவி, பாத்திமா, கவிதா,பாலாஜி, பாலமுருகன், நீதி ராஜன்,ராஜகுமாா், அருந்தேவி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கொடும்பாளூா் அகழாய்வில் வெளிப்பட்ட தங்கக் குண்டுமணி, மண் பானை!

கொடும்பாளூா் அகழாய்வுப் பணியில் பண்டைய கால தங்க குண்டு மணி, மூடிய நிலையில் அழகிய மண்பானை கிடைத்துள்ளது. கொடும்பாளூரில் கடந்த ஜனவரி 12-இல் அகழாய்வுப் பணி நடைபெற்றது. இதில், நான்கு அடி தோண்டிய நிலையில்... மேலும் பார்க்க

விராலிமலை அருகே மீன்பிடித் திருவிழா

விராலிமலையை அடுத்துள்ள தென்னலூா் காடுவெட்டி பெரிய குளத்தில் சனிக்கிழமை மீன்பிடி திருவிழா நடைபெற்றது. ஊா் முக்கியஸ்தரின் உத்தரவுக்குப் பின்னா் குளத்தில் இறங்கிய மீன் பிடியாளா்கள் பெரும்பாலானோரின் வலையி... மேலும் பார்க்க

139 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.1.42 கோடியில் வாகனங்கள் வழங்கல்

புதுக்கோட்டையில் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சாா்பில் 139 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ. 1.42 கோடி மதிப்பில் இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட இரு சக்கர வாகனங்கள் சனிக்கிழமை வழங்கப்பட்டன. இந்த நிக... மேலும் பார்க்க

உச்ச நீதிமன்றம் சுயமாக செயலாற்றக் கூடாது என நினைக்கிறாா்கள்! அமைச்சா் எஸ். ரகுபதி

உச்ச நீதிமன்றம் சுயமாக செயலாற்றக் கூடாது என மத்தியில் ஆள்வோா் நினைக்கிறாா்கள் என்றாா் மாநில சட்டத்துறை அமைச்சா் எஸ். ரகுபதி. புதுக்கோட்டையில் சனிக்கிழமை அவா் அளித்த பேட்டி: ஆளுநா் மசோதாக்களை கிடப்பில... மேலும் பார்க்க

புதுகையில் சாலையோரம் கொட்டப்பட்ட மருத்துவக் கழிவுகள் அகற்றம்; தனியாா் மருத்துவமனைக்கு ரூ. 20 ஆயிரம் அபராதம்

புதுக்கோட்டை நகரில் சட்டவிரோதமாக சாலையோரம் கொட்டப்பட்ட மருத்துவக் கழிவுகளை, மாநகராட்சிப் பணியாளா்கள் வெள்ளிக்கிழமை அகற்றினா். இதைத் தொடா்ந்து பொதுவெளியில் அபாயகரமாக மருத்துவக் கழிவுகளைக் கொட்டியதாக, அ... மேலும் பார்க்க

திமுக எம்.பி. கனிமொழி குறித்து தரக்குறைவாக ஆடியோ வெளியிட்டவா் கைது

திமுக எம்.பி. கனிமொழி குறித்து தரக்குறைவாகப் பேசி சமூக ஊடகத்தில் ஆடியோ வெளியிட்ட தூத்துக்குடியைச் சோ்ந்த நபரை புதுக்கோட்டை இணையவழிக் குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். புத... மேலும் பார்க்க