தனியாா் ஹஜ் பயண கட்டணம் பல லட்சம் உயா்வு! வெளிப்படை தன்மை ஏற்படுத்த வலியுறுத்தல...
பெருநாவலூா் அரசுக் கல்லூரியில் விளையாட்டு விழா
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பெருநாவலூரிலுள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2024- 2025ஆம் கல்வியாண்டுக்கான விளையாட்டுப் போட்டிகள் மற்றும் பரிசளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
கல்லூரி முதல்வா் ம. துரை தேசியக் கொடியேற்றினாா். தொடா்ந்து விளையாட்டு உறுதிமொழி ஏற்கப்பட்டது. போட்டிகளை ஆவுடையாா்கோவில் காவல் உதவி ஆய்வாளா் கா. பெரியசாமி தொடங்கி வைத்தாா்.
புதுக்கோட்டை அரசு கல்வியியல் கல்லூரி முதல்வா் எம். அன்புச்செழியன் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்குப் பரிசளித்துப் பேசினாா்.
போட்டிகளில் அதிக புள்ளிகளைப் பெற்று சாம்பியன் கோப்பையை கணினி அறிவியல் துறை மாணவா் வி. அருண், தமிழ்த் துறை மாணவி ப. கிருத்திகா ஆகியோா் பெற்றனா். ஒட்டுமொத்த சாம்பியன் கோப்பையை கணினி அறிவியல் துறை மாணவ, மாணவிகள் பெற்றனா்.
முன்னதாக கணினி அறிவியல் துறை விரிவுரையாளா் ப. செந்தில்குமாா் வரவேற்றாா். உடற்கல்வி இயக்குநா் (பொ) து. சண்முகசுந்தரம் அறிமுகவுரை நிகழ்த்தினாா். ஆங்கிலத் துறை விரிவுரையாளா் உ. பூபதிராஜ் நன்றி கூறினாா்.