செய்திகள் :

மாணவர்களிடமிருந்து ரூ.250 கோடி வசூலித்த தனியார் பயிற்சி மையம்: அமலாக்கத் துறை!

post image

நாடு முழுவதும் தனியார் பயிற்சி மையத்தின் அலுவலகங்களில் இரண்டு நாள்கள் சோதனை நடத்திய அமலாக்கத் துறை, நுழைவுத் தேர்வுகளுக்கு பயிற்சி அளிப்பதாகக் கூறி 14,000 மாணவர்களிடமிருந்து ரூ.250 கோடியை பெற்று மோசடி செய்திருப்பதாகத் தெரிவித்துள்ளது.

இந்த தனியார் பயிற்சி நிறுவனமானது, மிக மோசமான பண மோசடியில் ஈடுபட்டிருப்பது தெரிய வந்திருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

ஒட்டுமொத்தமாக நாடு முழுவதும் பல்வேறு மையங்களிலும் 14,411 மாணவர்களிடமிருந்து ரூ.250,2 கோடியை வசூலித்திருப்பதாகவும், 2025 - 26 முதல் 2028 - 29ஆம் ஆண்டு வரை பயிற்சி அளிப்பதாகவும் பெற்றோருக்கு உறுதி அளித்திருக்கிறது.

பயிற்சி வழங்குவதாகக் கூறி பணத்தை மட்டும் வசூலித்துவிட்டு முறையாக பயிற்சி வழங்கவில்லை. பெற்றோரிடமிருந்த பெற்ற பணத்தை வேறு செலவினங்களுக்கு செலவிட்டுவிட்டு, பயிற்சியாளர்களுக்கு பல மாத ஊதியம் நிலுவையில் வைக்கப்பட்டிருப்பதகாவும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதனால் நாடு முழுவதும் 32 பயிற்சி மையங்கள் மூடப்பட்டு, பணம் கட்டிய பெற்றோரும் மாணவர்களும் நிற்கதியாக விடப்பட்டுள்ளனர்.

பல்வேறு ஆவணங்கள் மற்றும் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகள் மூலம், இந்த நிறுவனம் பெற்றோரிடமிருந்த வசூலிக்கும் தொகை பயிற்சி நிறுவனங்களை நடத்துவதற்காக செலவிடாமல் இருந்துள்ளது அப்பட்டமாகத் தெரிய வந்திருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.

தனியார் பயிற்சி மையத்தின் இயக்குநர் டி.கே. கோயல், நிறுவனத்தின் நிர்வாகிகள் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் கடந்த 24ஆம் தேதி அமலாக்கத் துறை தீவிர சோதனை நடத்தியிருந்தது. இதில் ரூ.10 லட்சம் ரொக்கப் பணமும் ரூ.4.98 கோடி மதிப்புள்ள தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டன. ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

தூக்கில் தொங்கிய நிலையில் தலித் உடல்: உ.பி.யில் அதிர்ச்சி!

உத்தரப் பிரதேசத்தின் சஹாரன்பூரில் மரத்தில் தொங்கிய நிலையில் தலித் தொழிலாளி உடல் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக காவல்துறை கண்காணிப்பாளர் சாகர் ஜெயின் கூறுகையில், இற... மேலும் பார்க்க

அங்கோலா அதிபர் இந்தியா வருகை!

அங்கோலா நாட்டின் அதிபர் 4 நாள்கள் அரசு முறைப் பயணமாக இந்தியா வருகிறார்.தெற்கு ஆப்பிரிக்காவிலுள்ள அங்கோலா நாட்டின் அதிபர் ஜான் மானுவல் கோன்கால்வ்ஸ் லாரன்கோ குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் அழைப்பை ... மேலும் பார்க்க

பஹல்காம் தாக்குதலில் பலியானவர்களுக்கு தியாகி அந்தஸ்து: ராகுல் கோரிக்கை

பஹல்காம் தாக்குதலில் பலியானவர்களுக்கு தியாகி அந்தஸ்து வழங்குமாறு ராகுல் காந்தி கோரிக்கை விடுத்துள்ளார்.பஹல்காம் தாக்குதலில் பலியானவர்களின் குடும்பத்தை நேரில் சந்தித்து, ஆறுதல் கூறிய மக்களவை எதிர்க்கட்... மேலும் பார்க்க

புதிய உச்சம்! ஏப்ரல் மாத ஜிஎஸ்டி வருவாய் ரூ. 2.37 லட்சம் கோடி!

2025 ஏப்ரல் மாதத்தில் ரூ. 2.37 லட்சம் கோடி ஜிஎஸ்டி வருவாய் வசூலாகியுள்ளதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.இதுதொடர்பாக மத்திய நிதித் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலில் கூறப்பட்டுள்ளதாவது: 2025-26 ... மேலும் பார்க்க

மணிப்பூரில் தொடரும் அதிரடி நடவடிக்கைகள்! 6 கிளர்ச்சியாளர்கள், 4 கடத்தல்காரர்கள் கைது!

மணிப்பூரில் குடியரசுத் தலைவரின் ஆட்சியில் அதிரடி கைது நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.மணிப்பூரில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் தடைசெய்யப்பட்ட இயக்கத்தைச் சேர்ந்த 6 கிளர்ச்சியாளர்கள... மேலும் பார்க்க

ரயில் டிக்கெட் முன்பதிவில் புதிய விதிமுறை.. இன்று முதல் அமல்!

பயணிகள் வசதிக்காக, ரயில் டிக்கெட் முன்பதிவு விதிமுறைகளில் பல புதிய மாற்றங்களை இந்திய ரயில்வே அறிமுகப்படுத்தியிருக்கிறது. அவை இன்று முதல் நடைமுறைக்கு வருகின்றன. மேலும் பார்க்க