செய்திகள் :

மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்; கல்லூரிக்கு விடுமுறை, சமையல் அறைக்கு சீல்- நாமக்கல்லில் நடந்தது என்ன?

post image

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அடுத்துள்ள பல்லக்கபாளையம் கிராமத்தில், எக்ஸெல் எனும் தனியார் கல்வி நிறுவனம் இயங்கி வருகிறது. இந்தக் கல்வி வளாகத்தில் கலை அறிவியல் கல்லூரி, பொறியியல் கல்லூரி, சித்த மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு படிப்புகளுக்கான கல்லூரிகளில், பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். கல்லூரி வளாகத்தில் மாணவர்களுக்கான விடுதிகள் உள்ளன. இதில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கியுள்ளனர்.

இந்த நிலையில், கடந்த 27.10.2025 அன்று கல்லூரி விடுதியில் தங்கி இருந்த சிலருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக கல்லூரியில் இயங்கிவரும் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இதைத் தொடர்ந்து, 28.10.2025 அன்றும் ஒரு சில மாணவ, மாணவியர்களுக்கும் உடல் நிலை பாதிக்கப்பட்டதையடுத்து மாணவ, மாணவிகள் நாமக்கல்லில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

நாமக்கல் மாவட்ட நியமன அலுவலர் மருத்துவர் தங்கவிக்னேஷ், மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் ரங்கநாதன் உள்ளிட்ட உணவு பாதுகாப்பு துறையினர், கல்லூரி விடுதிக்குள் அமைந்துள்ள கல்லூரி உணவக இருப்பு அறை, உணவு பரிமாறும் கூடம், மேல்நிலை நீர் தேக்க தொட்டி ஆகியவற்றை ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வில், தகுதியற்ற முறையில் இயங்கி வந்த சமையலறைக்கு சீல் வைக்கப்பட்டது. , மாணவர்கள் தொடர்ச்சியாக பாதிக்கப்பட்டதால், நாமக்கல் மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி உத்தரவின் பெயரில், 29.10.2025ம் தேதி முதல் 02.11.2025ம் தேதி வரை கல்லூரிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதற்கிடையே, விடுதி உணவை சாப்பிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், ஐந்து பேர் வரை உயிரிழந்து உள்ளதாகவும், சமூக வலைதளங்களில் செய்தி பரவ... பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தண்ணீர் தொட்டிகள் ஆய்வு

இது தொடர்பாக கல்லூரி மாணவர்கள் சிலரிடம் பேசினோம். ''கல்லூரி விடுதியில் வழங்கப்படும் உணவு மிகவும் தரமற்றதாக இருக்கும். சமீபத்தில் உணவில் கூல் லிப் (cool lip) இருந்தது. இது தொடர்பாக புகார் அளித்தபோது, 'மார்க்கில் கை வைத்து விடுவோம்...' என்று நிர்வாகத்தினர் மிரட்டுகிறார்கள். கடந்த திங்கள்கிழமை கல்லூரி விடுதியில் வழங்கப்பட்ட உணவை சாப்பிட்ட மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதில் பாதிக்கப்பட்டு ஏராளமான மாணவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆனால், கல்லூரி நிர்வாகம் நிறைய விஷயங்களை மறைக்கிறது. கல்லூரி தரப்பில் இருந்து மாணவர்களுக்கு எந்தவித விளக்கத்தையும் கொடுக்காமல், விடுதியை காலி செய்து வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர். வரும் திங்கட்கிழமை (03.11.2025) அன்று மாணவர்களை திரட்டி போராட்டத்தில் ஈடுபடுவோம்'' என்றனர்.

உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு

மாணவர்கள் உயிரிழந்ததாக பரவிவரும் செய்தி தொடர்பாக கல்லூரி நிர்வாகத்தினரிடம் கேட்டபோது, ''27.10.2025 மற்றும் 28.10.2025 ஆகிய தேதிகளில் கல்லூரி விடுதியில் தங்கி இருந்த மாணவ, மாணவிகள் சுமார் 128 பேருக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது. கல்லூரி வளாகத்தில் உள்ள மருத்துவமனையில் மாணவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஒரு சில மாணவர்கள் நாமக்கல்லில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தொடர்ந்து நாமக்கல் மாவட்ட உணவு பாதுகாப்புதுறை நியமன அலுவலர் தங்க விக்னேஷ் தலைமையிலான உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் கல்லூரி விடுதி சமையலறையை ஆய்வு செய்தனர். அவர்கள் சமையல் அறையில் சில மாற்றங்களை செய்வதற்கு உத்தரவிட்டுள்ளனர். அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. சிகிச்சை பெற்று வந்த மாணவர்கள் அனைவரும் உடல்நிலை சரியாகி வீடு திரும்பி உள்ளனர். மாணவிகள் இறந்ததாக சமூக வலைதளங்களில் பரவும் தகவல் தவறானது. கல்லூரி வளாகத்திற்குள் எந்த விதமான அசாதாரண சூழ்நிலையும் ஏற்படவில்லை'' என்று தெரிவித்தனர்.

உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு

நாமக்கல் மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் ரங்கநாதனிடம் பேசியபோது, ''திங்கட்கிழமை (27.10.2025) அன்று கல்லூரி மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்படுவதாக விடுதி மாணவர்கள் தகவல் கொடுத்தனர். உடனடியாக அங்கு சென்று பார்த்தபோது, மாணவர்களுக்கு கல்லூரியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதைத் தொடர்ந்து, சமையல் அறை, உணவக இருப்பு அறை, உணவு பரிமாறும் கூடம், மேல்நிலை நீர் தேக்க தொட்டி ஆகியவற்றை ஆய்வு செய்தபோது, சுகாதாரமற்ற முறையில் உணவு கூடம் இயங்கியது தெரியவந்தது. உடனடியாக மாவட்ட நியமன அலுவலர் தங்க விக்னேஷ்க்கு தகவல் கொடுக்கப்பட்டு கல்லூரியில் ஆய்வு நடத்தினோம். ஆய்வின் அடிப்படையில் கல்லூரியில் உணவுக்கூடம் சமைப்பதற்கு தகுதியற்ற நிலையில் இருந்ததால் சீல் வைக்கப்பட்டது. பின்னர், தண்ணீர் தொட்டி முறையாக பராமரித்தல், சமையல் அறை புதுப்பித்தல், உணவுப் பொருட்களை மாற்றுவது உள்ளிட்ட 21 விதிமுறைகளை சரி செய்தால் மட்டுமே சமையல் அறை திறக்க உத்தரவிட்டுள்ளோம். கல்லூரிக்கு தண்ணீர் அருகே உள்ள கிணற்றிலிருந்து லாரி மூலமாக கொண்டு வரப்படுகிறது. அந்தக் கிணற்றையும் ஆய்வு செய்து சுத்தம் செய்ய சொல்லி இருக்கிறோம். மாணவர்களை பொறுத்தவரை 220 பேர் மருத்துவமனையில் அனுமதித்து உடல்நிலை சரியான உடன் வீடு திரும்பி உள்ளனர். பெரிய அளவில் மாணவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை'' என்றார்.

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி

கல்லூரி நிர்வாகத்தின் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை குறித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி கூறுகையில், ''கல்லூரி விடுதி நிர்வாகத்திற்கு வழங்கப்பட்ட சுகாதார சான்றிதழ் ரத்து செய்யப்பட்டுள்ளது. எக்ஸெல் கல்லூரி விடுதி நிர்வாகத்திற்கு வழங்கப்பட்ட உணவு பாதுகாப்பு சான்றிதழ் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கல்லூரி விடுதியில் 19 குறைபாடுகள் கண்டுபிடிக்கப்பட்டு, அதனை நிவர்த்தி செய்ய முன்னேற்ற அறிவிப்பு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு பொது சுகாதார சட்டம் 1939-ன் கீழ், கல்லூரி விடுதி நிர்வாகத்திற்கு 48 மணி நேரத்திற்குள் விடுதி, சமையலறை மற்றும் அனைத்து குடிநீர் தொட்டிகளையும் சுத்தம் செய்து அறிக்கை சமர்ப்பிக்க அறிவுறுத்தி, நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. பொது சுகாதாரச் சட்டம் மற்றும் உணவுப் பாதுகாப்புத் துறையின் கீழ் கல்லூரி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கான உத்தரவு விரைவில் வழங்கப்படும்'' என்று கூறினார்.

Doctor Vikatan: பருக்களை விரட்டுமா பயத்த மாவும் கடலை மாவும்?

Doctor Vikatan: எனக்கு வயது 23. நினைவு தெரிந்த நாள் முதல் முகத்துக்கு சோப் உபயோகிப்பதில்லை. பயத்த மாவு (பாசிப்பயறு மாவு) அல்லது கடலை மாவு மட்டும்தான் பயன்படுத்துவேன். சமீப நாள்களாக எனக்கு முகத்தில் அள... மேலும் பார்க்க

நாமக்கல்: திடீர் வாந்தி, மயக்கம்; கல்லூரி மாணவர்கள் 128 பேர் மருத்துவமனையில் அனுமதி! - விவரம் என்ன?

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அடுத்துள்ள பல்லக்கபாளையம் கிராமத்தில் தனியார் கல்லூரி இயங்கி வருகிறது. இங்கு கடந்த 27.10.2025 அன்று கல்லூரி விடுதியில் தங்கி இருந்த மாணவ, மாணவியர்களில் சிலருக்கு வாந்தி... மேலும் பார்க்க

Doctor Vikatan: 6 மாதக் குழந்தைக்கு மூலிகை மருந்துகள் கொடுக்கலாமா?

Doctor Vikatan: என் குழந்தைக்கு 6 மாதங்கள் ஆகின்றன. தலைக்குக் குளிப்பாட்டும் நாள்களில், வேப்பிலை, வெற்றிலை உள்ளிட்ட ஏதேதோ பொருள்களை அரைத்து குழந்தைக்குக் கொடுக்க வேண்டும் என்கிறார் என் மாமியார். பல வீ... மேலும் பார்க்க

வயிற்றுப்போக்கு முதல் மலேரியா வரை; மழைக்கால நோய்களைச் சமாளிப்பது எப்படி?

எத்தனைக் கொடுமையான வெயிலையும் அனுசரிக்கப் பழகிவிடும் நாம், சட்டெனப் பெய்யும் மழையில் தத்தளித்துப் போகிறோம். மழைக்காலத்தில் வீட்டில் நாம் என்னதான் எச்சரிக்கையாக இருந்தாலும், வெளியில் இருந்து வீட்டுக்கு... மேலும் பார்க்க

சில்வர்லைன் ஹாஸ்பிட்டல்ஸ் மற்றும் பி.ஹெச்.இ.எல் இணைந்து நடத்திய மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு

சில்வர்லைன் ஹாஸ்பிட்டல்ஸ் மற்றும் பி.ஹெச்.இ.எல் இணைந்து, திருச்சியில் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை பெருக்கும் நோக்கில் 'ரன் ஃபார் ஹோப்' மாரத்தான் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தனர்.2 கிமீ, 5 கிமீ மற்றும்... மேலும் பார்க்க

Doctor Vikatan: உப்பைக் குறைத்தும் குறையாத BP; ஹார்ட் அட்டாக் ரிஸ்க் அதிகரிக்குமா?

Doctor Vikatan: காரணமே இல்லாமல், சிலருக்கு பிபி அதிகரிப்பது ஏன்? உணவில் உப்பைக் குறைத்தும் பிபி அதிகரிப்பது ஏன், பிபி அதிகமாக உள்ளவர்களுக்கு ஹார்ட் அட்டாக் ரிஸ்க் அதிகம் என்பது உண்மையா, பிபி மானிட்டர்... மேலும் பார்க்க