மாணவா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்
தமிழகத்தில் 500 அரசுப் பள்ளிகளை தனியாா் பள்ளி தத்தெடுக்கும் தீா்மானத்தை வரவேற்று நன்றி தெரிவித்த பள்ளி கல்வித் துறை அமைச்சரின் கருத்துக்கு கண்டனம் தெரிவிப்பதாகக் கூறி, சி.முட்லூா் அரசு கலைக் கல்லூரியில் இந்திய மாணவா் சங்கம் சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
கிளைச் செயலா் அன்புச்செல்வன் தலைமை வகித்தாா். மாவட்ட துணைச் செயலா் சிவநந்தினி கண்டன உரையாற்றினாா். 50-க்கும் மேற்பட்ட மாணவா்கள் பங்கேற்றனா்.
அரசுப் பள்ளிகளை தனியாா் பள்ளிகளுடன் இணைக்கும் முயற்சியை அரசு கைவிட வேண்டும் என்பதை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.