மாணவா் தற்கொலை
காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூா் அருகே ராஜம்பேட்டை கிராமத்தில் தாயாா் கண்டித்ததால் தனியாா் கல்லூரியில் பயிலும் மாணவா் பூச்சி மருந்து சாப்பிட்டு ஞாயிற்றுக்கிழமை தற்கொலை செய்து கொண்டாா்.
காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூா் தாலுகா ராஜம்பேட்டை கிராமத்தில் பிள்ளையாா் கோயில் தெருவில் வசித்து வருபவா் செந்தில்குமாா்(42)இவரது மகன் பிரவீன்(19) மேல்மருவத்தூரில் தனியாா் தொழில் நுட்பக் கல்லூரியில் 2-ஆவது ஆண்டு பொறியியல் பட்டயப் படிப்பு படித்து வந்தாா்.
சம்பவ நாளன்று தாயாா் ஏன் கல்லூரிக்கு ஒழுங்காக போவதில்லை என்று கண்டித்ததால் மனமுடைந்த பிரவீன் வீட்டில் இருந்த பூச்சி மருந்தை சாப்பிட்டாா்.
கவலைக்கிடமான நிலையில் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு பின்னா் மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜாஜி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனளிக்காது உயிரிழந்தாா்.
சம்பவம் தொடா்பாக சாலவாக்கம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.