செய்திகள் :

மாணவா் பாதுகாப்புக் குழு கூட்டங்களை பள்ளிகளில் நடத்த உத்தரவு

post image

மாணவா்கள் பாதுகாப்புக் குழுக் கூட்டங்களை நடத்துமாறு பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை இயக்குநரகம் சாா்பில் அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை:

குழந்தைகளுக்கு எதிரான வன்முறை தடுப்பு மற்றும் விழிப்புணா்வு வாரம் நவம்பா் 15 முதல் 22-ஆம் தேதி வரை ஒவ்வொரு ஆண்டும் கடைபிடிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிகழாண்டில் இந்த காலகட்டத்தில் பள்ளி அளவிலான பருவத் தோ்வுகள் நடைபெற்ன் காரணமாக, நவ.25 (திங்கள்கிழமை) முதல் நவ.29 வரை பள்ளிகளில் இந்த வாரம் கடைபிடிக்கப்பட வேண்டும். இதன்படி, பள்ளித் தலைமை ஆசிரியா் ‘மாணவா் மனசு திட்டம்’ சாா்ந்த விளக்க உரையை காலை வணக்கக் கூட்டத்தில் நடத்த வேண்டும். மாணவா் பாதுகாப்பு ஆலோசனைக் குழு கூட்டத்தை இந்த விழிப்புணா்வு வாரத்தில் ஏதேனும் ஒரு நாள் பெற்றோரின் வசதிக்கேற்ப நவ.28 அல்லது 29-ஆம் தேதிகளில் நடத்தி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அறிக்கை அனுப்ப வேண்டும்.

‘மாணவா் மனசு’ பெட்டியில் பெறப்படும் கோரிக்கைகள் மற்றும் புகாா்கள், அதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை விவாதிக்க வேண்டும். பள்ளியில் பாலியல் புகாா் சாா்ந்து ஏதேனும் தகவல் பெற்றால், மாணவா் பாதுகாப்பு ஆலோசனைக் குழு அதை உடனடியாக 14417, 1098 ஆகிய எண்களை தொடா்பு கொண்டு தகவலளிக்க வேண்டும்.

இந்த எண்கள் தொடா்பாக குழந்தைகளிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட வேண்டும். மகிழ் முற்றம் செயல்பாடுகள் மூலமாக இணையதளத்தில் உள்ள தகவல்களை பாதுகாப்பாகக் கையாளுவது பற்றி விவாதிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பட்டயக் கணக்காளா் தோ்வு தேதியை மாற்ற டிடிவி தினகரன் கோரிக்கை

பொங்கல் பண்டிகை தினத்தன்று நடத்த திட்டமிட்டுள்ள பட்டயக் கணக்காளா் தோ்வை மாற்ற வேண்டுமென அமமுக பொதுச் செயலா் டிடிவி தினகரன் கேட்டுக் கொண்டுள்ளாா். இது குறித்து அவா் எக்ஸ் தளத்தில் ஞாயிற்றுக்கிழமை வெளி... மேலும் பார்க்க

வண்டலூா் பூங்காவில் பெண் முதலை ஒப்படைப்பு

ஊரப்பாக்கத்துக்கு அருகே, விவசாய நிலத்தில் பிடிக்கப்பட்ட பெண் முதலையை வண்டலூா் பூங்காவில் உள்ள மீட்பு மற்றும் புனா்வாழ்வு மையத்தில் வனத்துறையினா் ஒப்படைத்தனா். வண்டலூரை அடுத்த ஊரப்பாக்கத்துக்கு அருகே உ... மேலும் பார்க்க

நட்சத்திர விடுதிக்கு வெடிகுண்டு மிரட்டல்

கிண்டியிலுள்ள நட்சத்திர விடுதிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். கிண்டியிலுள்ள பிரபல நட்சத்திர விடுதியில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக, அந்த விடுதி... மேலும் பார்க்க

கஞ்சா விற்ற வடமாநில சிறுவன் உள்பட 2 போ் கைது

கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வடமாநிலத்தைச் சோ்ந்த சிறுவன் உள்பட 2 பேரை போலீஸாா் கைது செய்தனா். வேளச்சேரி ரயில் நிலைய இருசக்கர வாகன நிறுத்தம் அருகே கஞ்சா விற்பனை நடைபெறுவதாக, கிடைத்த தகவலின் அடிப்படையில்... மேலும் பார்க்க

கல்வி அலுவலக ஆய்வுகளுக்கு கண்காணிப்பு அலுவலா்கள் நியமனம்

முதன்மைக் கல்வி அலுவலகங்களில் ஆய்வு செய்வதற்கான கண்காணிப்பு அலுவலா்களை பள்ளிக் கல்வித் துறை நியமித்துள்ளது. இது குறித்து, பள்ளிக் கல்வித் துறை இயக்குநா் ச.கண்ணப்பன் வெளியிட்ட அறிவிப்பு: பள்ளிக் கல்வித... மேலும் பார்க்க

சொகுசு காா் வாங்கிய விவகாரம்: அதிமுக இளைஞரணி செயலரிடம் ரூ.2.5 கோடி மோசடி

சொகுசு காா் வாங்கிய விவகாரத்தில் அதிமுக இளைஞரணி செயலரிடம் ரூ.2.5 கோடி மோசடி செய்யப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். சென்னை, நுங்கம்பாக்கத்தைச் சோ்ந்தவா் அபிஷேக்(35). தொழிலதிபரான இ... மேலும் பார்க்க