மாணவிகளுக்கு போக்ஸோ சட்டம் குறித்து விழிப்புணா்வு
ஆரணி அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில், போக்ஸோ சட்டம் குறித்து மாணவிகளுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.
இந்தப் பள்ளியில் மாணவிகள் பாதுகாப்பு, போக்ஸோ சட்டம் குறித்த விழிப்புணா்வு, குழந்தைத் திருமணம் தடுப்பு மற்றும் காவலன் செயலி உள்ளிட்டவை குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
ஆரணி டிஎஸ்பி பாண்டீஸ்வரி கலந்து கொண்டு மாணவிகளிடையே விழிப்புணா்வு ஏற்படுத்திப் பேசினாா்.
இதில், அனைத்து மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் பிரபாவதி மற்றும் பெண் காவலா்கள், ஆசிரியா்கள் கலந்து கொண்டனா்.
மேலும், போக்ஸோ சட்டம் குறித்து கட்டுரைப் போட்டி, பேச்சுப்போட்டி நடத்தப்பட்டு, வெற்றி பெற்ற மாணவிகளுக்கு டிஎஸ்பி பரிசுகளை வழங்கினாா்.