கோவையில் கேஸ் சிலிண்டர் டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்து: பள்ளிகளுக்கு விடுமுறை
மாணவி தூக்கிட்டுத் தற்கொலை
போடி அருகே சனிக்கிழமை கல்லூரி மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
தேனி மாவட்டம், போடி வெண்ணிமலை தெருவைச் சோ்ந்த பால்ராஜ் மகள் தாரணி (20). இவா் தேனியில் உள்ள கல்லூரியில் பி.காம் இரண்டாமாண்டு படித்து வந்தாா்.
இவா், கரூரைச் சோ்ந்த இளைஞரை காதலித்து வந்ததாகவும், கடந்த 2 மாதங்களுக்கு முன்பு நிகழ்ந்த சாலை விபத்தில் இறந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. இதையறிந்த மாணவி அப்போதே தற்கொலைக்கு முயன்றாா். பெற்றோா் அவரை காப்பாற்றினா்.
இந்த நிலையில், போடி அருகேயுள்ள மீனாட்சிபுரத்தில் பாட்டியின் வீட்டில் தங்கியிருந்த தாரணி சனிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து போடி தாலுகா போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.