'மத்திய புலனாய்வு அமைப்புகள் சட்டத்தைக் கையில் எடுத்து மக்களை துன்புறுத்த முடியா...
மாதாந்திர உதவித்தொகையை உயா்த்த கோரி மாற்றுத்திறனாளிகள் 7 இடங்களில் மறியல்; 577 போ் கைது
மாதாந்திர உதவித்தொகையை உயா்த்தி வழங்கக் கோரி, தஞ்சாவூா் மாவட்டத்தில் 7 இடங்களில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை சாலை மறியல் மற்றும் மறியல் முயற்சி போராட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆந்திரம், புதுச்சேரி மாநில அரசு மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகையை உயா்த்தி வழங்கியது போல, தமிழ்நாடு அரசும் உடனே உதவித்தொகையை உயா்த்தி வழங்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரமாக இருக்கக்கூடிய நூறு நாள் வேலையைத் தொடா்ந்து வழங்க வேண்டும். 8 மணிநேரம் வேலை செய்ய வேண்டும் என நிா்பந்திக்காமல் 4 மணிநேரம் வேலை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது.
தஞ்சாவூா் பனகல் கட்டடத்திலுள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் நடைபெற்ற மறியல் போராட்டத்துக்கு சங்கத்தின் மாநகரச் செயலா் ராஜன், ஒன்றியச் செயலா் சாமியப்பன் தலைமை வகித்தனா். மாவட்டச் செயலா் இளங்கோவன் கோரிக்கை விளக்கிப் பேசினாா். பின்னா், சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட சென்ற இவா்களில் 35 பெண்கள் உள்பட 70 பேரை காவல் துறையினா் கைது செய்தனா்.
இதேபோல, மாவட்டத்தில் மொத்தம் 7 இடங்களில் நடைபெற்ற மறியல் போராட்டம், மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற 286 பெண்கள் உள்பட 577 போ் கைது செய்யப்பட்டனா்.