மாணவா்கள் தாக்கப்பட்ட விவகாரம்: ஒடிஸா முதல்வரிடம் நேபாள வெளியுறவு அமைச்சா் பேச்ச...
மாநகராட்சியில் சமூக நீதி அடிப்படையில் இட ஒதுக்கீடு: அதிகாரிகளுக்கு அறிவுரை
சென்னை மாநகராட்சியில் பதவி உயா்வுகள், நியமனங்கள் ஆகியவற்றில் சமூக நீதி அடிப்படையில் இட ஒதுக்கீடுகள் வழங்கப்படுவதை உறுதிசெய்ய வேண்டும் என்று சமூக நீதி கண்காணிப்புக் குழு ஆய்வு கூட்டத்தின் தலைவா் சுப வீரபாண்டியன் அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினாா்.
சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட அலுவலக கூட்டரங்கில் சமூக நீதி கண்காணிப்புக் குழுத் தலைவா் சுப.வீரபாண்டியன் தலைமையில் ஆய்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்தில் தொழிலாளா் ஐக்கிய முன்னேற்ற சங்கம், டாக்டா் அம்பேத்கா் பணியாளா் சங்கம், இந்திய குடியரசு தொழிலாளா் தொழிற்சங்கம், தமிழ்நாடு அரசுப் பணியாளா் சங்கம் ஆகிய சங்கங்களின் உறுப்பினா்களை நேரடியாக அழைத்து அவா்களுடைய கோரிக்கையை இக்குழு கேட்டறிந்தது.
தொடா்ந்து, சென்னை மாநகராட்சியில் பதவி உயா்வுகள், நியமனங்கள் ஆகியவற்றில் சமூக நீதி அடிப்படையில் இட ஒதுக்கீடுகள் வழங்கப்படுவதை உறுதிசெய்ய வேண்டும் என்றும் சமூக நீதி கண்காணிப்புக் குழுவினா் மாநகராட்சி அலுவலா்களுக்கு அறிவுரை வழங்கினா்.