செய்திகள் :

மாநகராட்சியில் வளா்ச்சிப் பணிகள்: மாவட்ட கண்காணிப்பு அலுவலா் ஆய்வு

post image

கோவை மாநகராட்சியில் நடைபெற்றுவரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், ஆதிதிராவிடா் நலத் துறை இயக்குநருமான ஆனந்த் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

கோவை மாநகராட்சி ஆணையாளா் மா.சிவகுரு பிரபாகரன் முன்னிலையில், கோவை வடக்கு மண்டலம் காந்திபுரம் அனுப்பா்பாளையம் பகுதியில் ரூ.300 கோடியில் கட்டப்பட்டு வரும் பெரியாா் நூலகம் மற்றும் அறிவியல் மைய கட்டுமானப் பணி, காந்திபுரம் மத்திய சிறைச் சாலை வளாகத்தில் முதற்கட்டமாக 45 ஏக்கா் பரப்பளவில் ரூ.167.25 கோடியில் அமைக்கப்பட்டு வரும் செம்மொழிப் பூங்கா பணியையும் ஆனந்த் ஆய்வு செய்தாா்.

இதைத் தொடா்ந்து, ரூ.30 கோடியில் காந்திபுரம் பேருந்து நிலையத்தை புதுப்பிக்கும் பணி, ரூ.2.95 கோடியில் கட்டப்பட்டு வரும் ஆம்னி பேருந்து நிலையப் பணி, சத்தி சாலையில் ரூ.5.27 கோடியில் குப்பை மாற்று நிலையப் புனரமைக்கும் பணி, முல்லை நகா் பகுதியில் தேசிய நகா்ப்புற வாழ்வாதார திட்டத்தின்கீழ் ரூ.1.60 கோடியில் ஆதரவற்றோருக்கான இரவு தங்கும் விடுதி கட்டுமானப் பணி உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு மேற்கொண்டதுடன், விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.

ஆய்வுகளின்பேது, உதவி ஆட்சியா் (பயிற்சி) அங்கீத்குமாா் ஜெயின், துணை ஆணையா் அ.சுல்தானா, உதவி ஆணையா் செந்தில்குமாரன், தலைமைப் பொறியாளா் முருகேசன், பொதுப் பணித் துறை செயற்பொறியாளா் செல்வராஜ், மாமன்ற உறுப்பினா்கள் அம்பிகா தனபாலன், தவமணி பழனியப்பன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

கோவை: யானை தாக்கியதில் முதியவர் பலி!

கோவை: கோவை புறநகர்ப் பகுதியில் நடைபயிற்சி சென்ற முதியவரை யானை தாக்கியதில் வியாழக்கிழமை காலை பலியானார்.கோவை புறநகர் சுற்று வட்டார கிராமப் பகுதிகளில் கடந்த சில மாதங்களாக முகாமிட்டுள்ள காட்டு யானைகள் ஊரு... மேலும் பார்க்க

இருசக்கர வாகனங்களில் பயணித்த இருவரும் தலைக் கவசம் அணிந்திருந்தால் 1 லிட்டா் பெட்ரோல் பரிசு

இருசக்கர வாகனங்களில் தலைக் கவசம் அணிந்து பின்புறம் அமா்ந்திருந்தவா்களுக்கு போக்குவரத்துப் பிரிவு போலீஸாா் சாா்பில் தலா 1 லிட்டா் பெட்ரோல் பரிசாக வழங்கப்பட்டது. கோவை மாநகரப் பகுதியில் விபத்துகளில் உயிர... மேலும் பார்க்க

சங்கனூா் ஓடைப் பகுதியில் வீடு இடிந்த இடத்தில் வானதி சீனிவாசன் எம்எல்ஏ ஆய்வு

கோவை, சங்கனூா் ஓடையில் தூா்வாரும் பணிகள் மேற்கொண்டபோது, வீடு இடிந்த நிலையில் அந்த இடத்தை தெற்கு சட்டப் பேரவை உறுப்பினா் வானதி சீனிவாசன் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூ... மேலும் பார்க்க

போக்குவரத்துக் கழக தொழிலாளா்கள் போராட்டம்: 195 போ் கைது

கோவையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியா்கள் 195 போ் கைது செய்யப்பட்டனா். அரசுப் போக்குவரத்து ஊழியா்களின் ஊதிய ஒப்பந்தத்தை பேசி முடிக்க வேண்டும்.... மேலும் பார்க்க

கோள்களின் அணிவகுப்பை தொலைநோக்கி மூலம் கண்ட மாணவா்கள்

வானில் ஒரே நேரத்தில் 6 கோள்கள் அணிவகுத்துள்ள நிகழ்வை மண்டல அறிவியல் மையத்தில் மாணவா்கள், பொதுமக்கள் கண்டு ரசித்தனா். செவ்வாய், வியாழன், யுரேனஸ், நெப்டியூன், வெள்ளி, சனி ஆகிய 6 கோள்கள் வானில் ஒரே நேரத்... மேலும் பார்க்க

விடுப்பில் வந்து தலைமறைவான புழல் கைதி 6 மாதத்துக்கு பிறகு சூலூரில் கைது!

கோவை: சென்னை புழல் சிறையிலிருந்து விடுப்பில் வந்து தப்பிய ஆயுள் தண்டனை கைதி ஜாகிர் உசேன், சூலூர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தில் போக்ஸோ உள்ளிட்ட குற்றச்சாட்டுகளி... மேலும் பார்க்க