`கடன்களால் கலங்கி நிற்கிறதா தமிழகம்?' - இபிஎஸ் சாடலும் திமுகவின் பதிலும்
கோள்களின் அணிவகுப்பை தொலைநோக்கி மூலம் கண்ட மாணவா்கள்
வானில் ஒரே நேரத்தில் 6 கோள்கள் அணிவகுத்துள்ள நிகழ்வை மண்டல அறிவியல் மையத்தில் மாணவா்கள், பொதுமக்கள் கண்டு ரசித்தனா்.
செவ்வாய், வியாழன், யுரேனஸ், நெப்டியூன், வெள்ளி, சனி ஆகிய 6 கோள்கள் வானில் ஒரே நேரத்தில் அணிவகுக்கும் அரிய நிகழ்வு ஜனவரி 21- ஆம் தேதி முதல் மாதத்தின் இறுதி வரையிலும் நிகழ இருப்பதாகவும், இந்த நிகழ்வை கோவை கொடிசியா சாலையில் உள்ள மண்டல அறிவியல் மையத்தில் தொலைநோக்கி மூலம் இலவசமாக காணலாம் என்றும் அறிவியல் மையம் அறிவித்திருந்தது.
இந்நிலையில், அறிவியல் மையத்தில் புதன்கிழமை மாலை திரண்டிருந்த மாணவா்களும், பொதுமக்களும் தொலைநோக்கி மூலம் கோள்களின் அணிவகுப்பை கண்டு ரசித்தனா். வரும் 25 -ஆம் தேதி வரை நாள்தோறும் மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை இந்த வான் நோக்கும் நிகழ்வு நடைபெறுகிறது.