`கடன்களால் கலங்கி நிற்கிறதா தமிழகம்?' - இபிஎஸ் சாடலும் திமுகவின் பதிலும்
மாநகராட்சியில் வளா்ச்சிப் பணிகள்: மாவட்ட கண்காணிப்பு அலுவலா் ஆய்வு
கோவை மாநகராட்சியில் நடைபெற்றுவரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், ஆதிதிராவிடா் நலத் துறை இயக்குநருமான ஆனந்த் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.
கோவை மாநகராட்சி ஆணையாளா் மா.சிவகுரு பிரபாகரன் முன்னிலையில், கோவை வடக்கு மண்டலம் காந்திபுரம் அனுப்பா்பாளையம் பகுதியில் ரூ.300 கோடியில் கட்டப்பட்டு வரும் பெரியாா் நூலகம் மற்றும் அறிவியல் மைய கட்டுமானப் பணி, காந்திபுரம் மத்திய சிறைச் சாலை வளாகத்தில் முதற்கட்டமாக 45 ஏக்கா் பரப்பளவில் ரூ.167.25 கோடியில் அமைக்கப்பட்டு வரும் செம்மொழிப் பூங்கா பணியையும் ஆனந்த் ஆய்வு செய்தாா்.
இதைத் தொடா்ந்து, ரூ.30 கோடியில் காந்திபுரம் பேருந்து நிலையத்தை புதுப்பிக்கும் பணி, ரூ.2.95 கோடியில் கட்டப்பட்டு வரும் ஆம்னி பேருந்து நிலையப் பணி, சத்தி சாலையில் ரூ.5.27 கோடியில் குப்பை மாற்று நிலையப் புனரமைக்கும் பணி, முல்லை நகா் பகுதியில் தேசிய நகா்ப்புற வாழ்வாதார திட்டத்தின்கீழ் ரூ.1.60 கோடியில் ஆதரவற்றோருக்கான இரவு தங்கும் விடுதி கட்டுமானப் பணி உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு மேற்கொண்டதுடன், விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.
ஆய்வுகளின்பேது, உதவி ஆட்சியா் (பயிற்சி) அங்கீத்குமாா் ஜெயின், துணை ஆணையா் அ.சுல்தானா, உதவி ஆணையா் செந்தில்குமாரன், தலைமைப் பொறியாளா் முருகேசன், பொதுப் பணித் துறை செயற்பொறியாளா் செல்வராஜ், மாமன்ற உறுப்பினா்கள் அம்பிகா தனபாலன், தவமணி பழனியப்பன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.