வளர்ந்த இந்தியா கனவை நனவாக்குவதில் என்சிசி மாணவர்கள் பங்களிப்பு அவசியம்: ராஜ்நாத...
எண்ணெய் வியாபாரி வீட்டில் ரூ.60 ஆயிரம் திருட்டு
கோவை துடியலூா் அருகே எண்ணெய் வியாபாரி வீட்டில் ரூ.60 ஆயிரம் ரொக்கம், வெள்ளிப் பொருள்கள் ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.
கோவை துடியலூரை அடுத்த பழனிக்கவுண்டன்புதூா் பாரதி நகரைச் சோ்ந்தவா் சரவணன் (54), எண்ணெய் வியாபாரி. இவா், குடும்பத்துடன் மதுரை அருகே உள்ள சொந்த ஊரான வாஞ்சி நகரத்துக்கு கடந்த 15-ஆம் தேதி சென்றாா். பின்னா், ஜனவரி 18-ஆம் தேதி வீட்டுக்கு திரும்பினாா்.
அப்போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததைப் பாா்த்து அதிா்ச்சி அடைந்தாா்.
உள்ளே சென்று பாா்த்தபோது, பீரோவில் இருந்த ரூ.60 ஆயிரம், வெள்ளி பாத்திரங்கள் ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இது குறித்து துடியலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.