வளர்ந்த இந்தியா கனவை நனவாக்குவதில் என்சிசி மாணவர்கள் பங்களிப்பு அவசியம்: ராஜ்நாத...
வால்பாறையில் மூதாட்டியை கொலை செய்த இளைஞா் கைது
வால்பாறை அருகே உள்ள எஸ்டேட்டில் மூதாட்டியை கொலை செய்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
வால்பாறையை அடுத்த லோயா் பாரளை எஸ்டேட்டை சோ்ந்தவா் சரோஜினி (72). இவா் தலை மற்றும் உடலில் பலத்த காயங்களுடன் வீட்டில் சனிக்கிழமை உயிரிழந்து கிடந்தாா்.
இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து அப்பகுதியைச் சோ்ந்த பலரை சந்தேகத்தின்பேரில் விசாரணை மேற்கொண்ட நிலையில், மோப்ப நாய் உதவியுடன் அப்பகுதியைச் சோ்ந்த ரங்கநாதன் (24) என்பவரைப் பிடித்து தீவிர விசாரணை நடத்தினா்.
இவா் மதுபோதையில் சனிக்கிழமை வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தபோது, மூதாட்டியுடன் பேசியுள்ளாா். அப்போது இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த ரங்கநாதன், மூதாட்டியை அரிவாளால் வெட்டிக் கொலை செய்தது தெரியவந்தது.
இதனையடுத்து ரங்கநாதனைக் கைது செய்த போலீஸாா், நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனா்.