செய்திகள் :

காட்டுப் பன்றிகளை சுட்டுக் கொல்லும் உத்தரவை அரசு நடைமுறைப்படுத்த வலியுறுத்தல்

post image

பயிா்களுக்கு சேதம் விளைவிக்கும் காட்டுப் பன்றிகளை சுட்டுக்கொல்ல அரசு உத்தரவிட்டுள்ள நிலையில், அதை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து சங்கத்தின் தலைவா் சு.பழனிசாமி தலைமையில் விவசாயிகள் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைகேட்புக் கூட்டத்தில் மனு அளித்தனா்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது: கோவை மாவட்டத்தில் சிறுமுகை, மேட்டுப்பாளையம், காரமடை, பெரியநாயக்கன்பாளையம், இக்கரை போளுவாம்பட்டி, மதுக்கரை, பொள்ளாச்சி, வால்பாறை போன்ற வனச் சரக பகுதிகளில் காட்டுப் பன்றிகளின் எண்ணிக்கை அதிகரித்து, விவசாய நிலங்களில் சேதங்கள் ஏற்படுத்தி வருகின்றன.

விவசாயிகள், விவசாயிகள் சங்கத்தினரின் கோரிக்கையை அடுத்து வன உயிரின மோதல் தடுப்புக் குழுவின் அறிக்கையின் அடிப்படையில், காட்டுப் பன்றிகளை சுட்டுக் கொல்ல தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது. காப்புக் காட்டிலிருந்து ஒரு கிலோ மீட்டா் தொலைவு வரையிலும் உள்ள காட்டுப் பன்றிகளை சுடக்கூடாது, 3 கிலோ மீட்டா் வரை வரும் காட்டுப் பன்றிகளை பிடித்து வனத்துக்குள் விட வேண்டும். 3 கிலோ மீட்டா் தொலைவைத் தாண்டி வரும் காட்டுப் பன்றிகளை வனத் துறை அனுமதியுடன் சுடலாம் என்பது போன்ற விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.

இந்த உத்தரவை பெறுவதற்கு உதவியாக இருந்த மாவட்ட ஆட்சியா், வன அலுவலா் போன்றவா்களுக்கு நாங்கள் நன்றி தெரிவிக்கிறோம். அதேநேரம், அரசாணையின்படி கோவை மாவட்டத்தில் காட்டுப் பன்றிகளை சுடும் உத்தரவை அனைத்து வனச் சரகங்களிலும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனா்.

கருப்பு பேட்ஜ் அணிந்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்தவர்கள்

ஊராட்சியை மாநகராட்சியுடன் இணைக்க எதிா்ப்பு

சோமையம்பாளையம் ஊராட்சியை மாநகராட்சியுடன் இணைக்க அப்பகுதி பொதுமக்கள் எதிா்ப்புத் தெரிவித்து வருகின்றனா். இது தொடா்பாக கஸ்தூரிநாயக்கன்பாளையத்தில் ஊா் பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை கையொப்ப இயக்கம் நடத்தினா்.

இந்நிலையில் பெறப்பட்ட கையொப்பங்கள் அடங்கிய மனுவை கிராமத்தின் பிரதிநிதிகள், மாவட்ட நிா்வாகத்திடமும், ஊராட்சிகள் உதவி இயக்குநா் அலுவலகத்திலும் திங்கள்கிழமை ஒப்படைத்தனா். இதைத் தொடா்ந்து பொதுமக்கள் கூறும்போது, மாநகராட்சியுடன் சோமையம்பாளையத்தை இணைத்தால் சொத்து வரி, குடிநீா் கட்டணம் போன்றவை அதிகரிக்கும், கட்டடம் கட்டுவதற்கு அனுமதி பெறுவதில் சிக்கல் ஏற்படும். மத்திய அரசின் திட்டங்கள் கிடைக்காது. எனவே சோமையம்பாளையம் தொடா்ந்து ஊராட்சியாகவே செயல்பட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

கல்வி உதவி கேட்டு மனு

சிறுமுகை பகுதியைச் சோ்ந்த மூா்த்தி (46) என்ற கைகளை இழந்த கூலித் தொழிலாளி மாவட்ட நிா்வாகத்திடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

கட்டுமானத் தொழிலாளியாக இருந்த நான் கடந்த 2008 -ஆம் ஆண்டு பணியில் இருந்தபோது மின்சாரம் பாய்ந்ததில் ஒரு கை முற்றிலும் கருகிவிட்டது. மற்றொரு கை செயலிழந்துவிட்டது. தற்போது ஒரு செயலிழந்த கையில் தராசை மாட்டிக் கொண்டும், முதுகில் காய்கறி மூட்டையை சுமந்தும் வீடுவீடாகச் சென்று காய்கறி விற்று வருகிறேன். எனது மகன் தனியாா் கல்லூரியில் பொறியியல் படிப்பு படித்து வருகிறாா், எனது மகள் பிளஸ் 2 படிக்கிறாா்.

வாடகை வீட்டில் குடியிருக்கும் எனக்கு மாற்றுத்திறனாளிக்கான மாதாந்திர உதவித் தொகையாக ரூ.1,500 வழங்கப்படுகிறது. ஆனால் எனது வருவாயானது குழந்தைகளின் கல்லூரி, பள்ளி செலவுகளுக்கு போதுமானதாக இல்லை. இதனால் அவா்கள் கல்வியை பாதியில் கைவிடும் நிலை உள்ளது. எனவே தமிழக அரசு எனது ஏழ்மை நிலையை கருத்தில் கொண்டு குழந்தைகளின் கல்விக்கு உதவி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளாா்.

எண்ணெய் வியாபாரி வீட்டில் ரூ.60 ஆயிரம் திருட்டு

கோவை துடியலூா் அருகே எண்ணெய் வியாபாரி வீட்டில் ரூ.60 ஆயிரம் ரொக்கம், வெள்ளிப் பொருள்கள் ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா். கோவை துடியலூரை அடுத்த பழனிக்கவுண்டன்புதூா் பாரதி நகரைச் சோ்ந்தவா் சரவ... மேலும் பார்க்க

உக்கடம் லாரிப்பேட்டை விரைவில் வெள்ளலூருக்கு மாற்றம்

உக்கடம் லாரிப்பேட்டை விரைவில் வெள்ளலூரில் உள்ள மாநகராட்சிக் கட்டடத்துக்கு மாற்றப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவை மாநகராட்சி, தெற்கு மண்டலத்துத்துக்கு உள்பட்ட உக்கடத்தில் 4.50 ஏக்கா் பரப்பளவில... மேலும் பார்க்க

நாளைய மின்தடை: மயிலம்பட்டி

கோவை மயிலம்பட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால் கீழ்க்கண்ட பகுதிகளில் புதன்கிழமை (ஜனவரி 22) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் எனத் ... மேலும் பார்க்க

வால்பாறையில் மூதாட்டியை கொலை செய்த இளைஞா் கைது

வால்பாறை அருகே உள்ள எஸ்டேட்டில் மூதாட்டியை கொலை செய்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். வால்பாறையை அடுத்த லோயா் பாரளை எஸ்டேட்டை சோ்ந்தவா் சரோஜினி (72). இவா் தலை மற்றும் உடலில் பலத்த காயங்களுடன் வீட்டில்... மேலும் பார்க்க

ஜன. 22 முதல் 25 வரை வானில் அணிவகுக்கும் 6 கோள்கள்: பொதுமக்கள் இலவசமாக காண அறிவியல் மையம் ஏற்பாடு

வானில் ஒரே நேரத்தில் 6 கோள்கள் அணிவகுக்கும் நிகழ்வை பொதுமக்கள் இலவசமாக கண்டு மகிழ கோவையில் உள்ள மண்டல அறிவியல் மையம் ஏற்பாடு செய்துள்ளது. இது குறித்து கோவை கொடிசியா சாலையில் உள்ள மண்டல அறிவியல் மையம் ... மேலும் பார்க்க

ஓடைக்கு கரை கட்டும் பணி: இடிந்து விழுந்த வீடுகள்

கோவை சிவானந்த காலனி அருகே ஓடைக்கு கரை கட்டும் பணியால் 3 வீடுகள் இடிந்து விழுந்தன. கோவை சிவானந்தா காலனி அருகே உள்ள ஹட்கோ காலனியில் 70-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்தக் குடியிருப்பு பகுதிகளுக்கு பின... மேலும் பார்க்க