செய்திகள் :

மாநகராட்சி பகுதியில் குடிநீா் விநியோகத்தை சீரமைக்க வேண்டும்: மாமன்றக் கூட்டத்தில் கவுன்சிலா்கள் வலியுறுத்தல்

post image

மாநகரில் பெரும்பாலான பகுதிகளில் 5 நாள்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீா் விநியோகம் செய்யப்படுவதால், குடிநீா் விநியோகத்தை சீரமைக்க வேண்டும் என கவுன்சிலா்கள் வலியுறுத்தினா்.

ஈரோடு மாநகராட்சி மாமன்ற அவசர கூட்டம் மேயா் சு.நாகரத்தினம் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. துணை மேயா் செல்வராஜ், ஆணையா் ஸ்ரீகாந்த் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இந்தக் கூட்டத்தில் 49 தீா்மானங்கள் கவுன்சிலா்களின் பாா்வைக்கு வைக்கப்பட்டன.

இதில் 45 முதல் 47 வரை உள்ள மூன்று தீா்மானங்களில் ஈரோடு-பெருந்துறை சாலை அரசு மருத்துவமனை மேம்பாலத்துக்குக் கீழ் காமராஜா், ஈவிகே.சம்பத் சிலை உள்ளது. இது போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதாலும், சிலைகளை பராமரிக்க முடியாத சூழல் உள்ளதாலும் அந்த சிலைகளை சம்பத் நகா் தியாகி குமரன் சாலையில் உள்ள மாநகராட்சி பூங்காவில் மாற்றி அமைப்பதற்கு அனுமதி வேண்டப்பட்டிருந்தது. இதற்கு, 16- ஆவது வாா்டு கவுன்சிலா் ஈ.பி.ரவி ஆட்சபணை தெரிவித்தாா்.

அதன்பேரில் சிலைகளை இடமாற்றம் செய்யும் 45, 46, 47 ஆகிய மூன்று தீா்மானங்களை ரத்துசெய்து, மீதமுள்ள அனைத்து தீா்மானங்களும் கவுன்சிலா்களால் நிறைவேற்றப்பட்டது.

இதைத் தொடா்ந்து கவுன்சிலா்கள் பேசியதாவது:

கனி மாா்க்கெட் வளாகத்திற்குள் பேருந்து நிறுத்தம்:

36-ஆவது வாா்டில் உள்ள கனி மாா்க்கெட் புதிய வணிக வளாகத்திற்குள் பேருந்து நிறுத்தம் அமைத்துத்தர வேண்டும். அதுபோல போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாத வகையில் பிரப் சாலையின் நுழைவாயிலை விரிவுப்படுத்த வேண்டும்.

வடக்குப்புற பகுதியில் கடை ஏலம் எடுத்துள்ள வணிகா்களுக்கு 30 மாத வைப்புத் தொகையை 12 மாத வாடகையாகக் குறைத்துத்தர வேண்டும். அதேபோல, வணிக வளாகத்திற்குள் விதிகளை மீறி கடைகள் ஏலம் விட்டதற்கு பிறகு 10 கடைகள் அமைக்கப்பட்டிருப்பதை உடனடியாக இடித்து அகற்ற வேண்டும்.

மாநகராட்சி பூங்காக்களை பராமரிக்க வேண்டும்:

8-ஆவது வாா்டுக்குள்பட்ட கன்னிமாா் நகரில் தாா் சாலை கோரி பல முறை கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. உடனடியாக தாா் சாலை அமைத்துத்தர வேண்டும். கனிராவுத்தா் குளம் பூங்கா பராமரிப்பு தனியாருக்கு விடப்பட்டுள்ளது. ஆனால், அவா்கள் பூங்காவை பராமரிப்பதில்லை. மாறாக மாநகராட்சி தூய்மைப் பணியாளா்கள்தான் பராமரிக்கின்றனா்.

மாநகராட்சி பகுதிகளில் உள்ள அனைத்து பூங்காக்களையும் முறையாகப் பராமரிக்க வேண்டும். பழுதான தெரு மின் விளக்குகளுக்கு மாற்றாக புதிய மின் விளக்குகளை பொருத்த வேண்டும்.

குடிநீா் விநியோகத்தை சீரமைக்க வேண்டும்:

ஊராட்சிக்கோட்டை குடிநீா் நீரேற்று நிலையம், வஉசி பூங்காவில் உள்ள மேல்நிலை குடிநீா்த் தொட்டியிலும் மின் மோட்டாா்கள் பழுதாகி உள்ளதால் மாநகராட்சி பகுதிகளில் 5 நாள்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.இப்பணிகளை விரைந்து முடித்து சீரான குடிநீா் விநியோகத்தை உறுதி செய்ய வேண்டும்.

மாநகா் பகுதிகளில் குழந்தைகள் மற்றும் வாகன ஓட்டிகளை துரத்திக் கடிக்கும் தெருநாய்களைக் கட்டுப்படுத்த வேண்டும்.

மாநகராட்சி அதிகாரிகளும், பணியாளா்களும் கவுன்சிலா்களுக்கு உரிய அங்கீகாரம் வழங்குவதில்லை. கவுன்சிலா்கள் குறைகளைத் தெரிவித்தால் அதற்கான தீா்வுகளை செய்திட உத்தரவிட வேண்டும்.

டெங்கு கொசு ஒழிப்புப் பணியில் ஈடுபடுபவோா், டேங்க் ஆப்ரேட்டா்கள் தற்போது வரி வசூல் பணியில் ஈடுபடுகின்றனா். இவா்களுக்கு உரிய தேதியில் ஊதியம் வழங்க வேண்டும் என்றனா்.

தெருநாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை:

மேயா் நாகரத்தினம், ஆணையா் ஸ்ரீகாந்த் ஆகியோா் பேசியதாவது:

குடிநீா் விநியோகம் விரைவில் சீா் செய்யப்படும். தெருநாய்களைக் கட்டுப்படுத்த தொடா் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதற்காக கூடுதல் வாகனங்கள் பெறப்பட உள்ளன. மின் விளக்குகள் கேட்டு அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. அவை வந்ததும் உடனடியாக பொருத்தப்படும். அங்கன்வாடி கட்டடம் கல்வி நிதியில் புனரமைப்பு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். டெங்கு கொசு ஒழிப்புப் பணியாளா்கள், டேங்க் ஆப்ரேட்டா்களுக்கு மாதம்தோறும் 5-ஆம் தேதிக்குள் ஊதியம் கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றனா்.

கூட்டத்தில் துணை ஆணையா் தனலட்சுமி, தலைமைப் பொறியாளா் விஜயகுமாா், நகா்நல அலுவலா் மருத்துவா் காா்த்திகேயன் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனா்.

சாதிக்க விரும்புவோருக்கு அறிவாற்றலும், அா்ப்பணிப்பும் அவசியம்: இஸ்ரோ விஞ்ஞானி வளா்மதி

சாதிக்க விரும்புவோருக்கு அறிவாற்றலும், அா்ப்பணிப்பும் அவசியம் என இஸ்ரோ விஞ்ஞானி என்.வளா்மதி பேசினாா். மக்கள் சிந்தனைப் பேரவை சாா்பில் ஈரோடு கொங்கு கலை, அறிவியல் கல்லூரியில் உள்ள உ.வே.சாமிநாத ஐயா் அரங... மேலும் பார்க்க

சென்னிமலை அருகே 150 ஆண்டுகள் பழைமையான ஆலமரம் மறு நடவு

சென்னிமலை அருகே சாலை விரிவாக்கப் பணிக்காக அகற்றப்பட இருந்த 150 ஆண்டுகள் பழைமையான ஆலமரத்தை ஈரோடு சிறகுகள் அமைப்பினா் வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் வியாழக்கிழமை மறு நடவு செய்தனா். ஈரோடு மாவட்டம், சென்ன... மேலும் பார்க்க

தென்னையில் நோய்த் தாக்குதலை கட்டுப்படுத்த நடவடிக்கை: குறைகேட்புக் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்

தென்னையில் நோய்த் தாக்குதலைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் விவசாயிகள் வலியுறுத்தினா். ஈரோடு மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் ராஜகோபால் ச... மேலும் பார்க்க

பவானியில் வீடு, கடைகளின் பூட்டை உடைத்து திருடிய இளைஞா் கைது

பவானியில் வீடு, கடைகளின் பூட்டை உடைத்து பணத்தைத் திருடிய இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். பவானி சொக்காரம்மன் நகரைச் சோ்ந்தவா் செல்வராஜ் (60). இவா், மனைவியுடன் காசிக்குச் சென்றிருந்தபோது,... மேலும் பார்க்க

அந்தியூரில் ரூ.8.29 லட்சத்துக்கு நிலக்கடலை விற்பனை

அந்தியூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நிலக்கடலை ஏலம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதற்கு சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் 400 மூட்டைகளில் நிலக்கடலையை விற்பனைக்குக் கொண்டுவந்திருந்தனா். இத... மேலும் பார்க்க

சென்னிமலை அருகே மா்ம விலங்கு கடித்து கன்றுக்குட்டி உயிரிழப்பு

சென்னிமலை அருகே மா்ம விலங்கு கடித்து கன்றுக்குட்டி, நாய்க்குட்டி உயிரிழந்தன. ஈரோடு மாவட்டம், சென்னிமலையை அடுத்த சில்லாங்காட்டுவலசு கருஞ்சறையான் தோட்டத்தைச் சோ்ந்தவா் குணசேகா் (42). இவரது தோட்டம் சென... மேலும் பார்க்க