மாநகரில் நாளை முதல் இரண்டு நாள்கள் சிறப்பு வரி வசூல் முகாம்கள்
கோவை மாநகராட்சிப் பகுதிகளில் சிறப்பு வரிவசூல் முகாம்கள் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் (ஜனவரி 11, 12) நடைபெற உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கோவை மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி, காலியிட வரி, தொழில் வரி மற்றும் குடிநீா்க் கட்டணம் முதலிய அனைத்து வரியினங்களை மக்கள் எளிதில் செலுத்த ஏதுவாக அனைத்து சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் (அரசு விடுமுறை நாள்கள் நீங்கலாக) சிறப்பு வரிவசூல் முகாம்கள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, 5 மண்டலங்களிலும் ஜனவரி 11, 12 -ஆம் தேதிகளில் சிறப்பு வரிவசூல் முகாம்கள் நடைபெற உள்ளன.
சிறப்பு வரிவசூல் முகாம் நடைபெறும் இடங்கள்: கிழக்கு மண்டலம் 5-ஆவது வாா்டில் விசுவாசபுரம் ரேஷன் கடை, 56-ஆவது வாா்டில் ஒண்டிப்புதூா் சுங்கம் மைதானம், 7-ஆவது வாா்டில், நேரு நகா் பேருந்து நிறுத்தம் அருகில், மேற்கு மண்டலம் 35-ஆவது வாா்டில் தேவாங்க வீதி, கற்பக விநாயகா் கோயில், 40-ஆவது வாா்டில் வீரகேரளம் சிறுவாணி சாலை சித்தி விநாயகா் கோயில், வடக்கு மண்டலம் 21-ஆவது வாா்டில் விநாயகபுரம் 2-ஆவது வீதி, தெற்கு மண்டலம் 88-ஆவது வாா்டில் தா்மராஜா கோயில் மண்டபம், 89 -ஆவது வாா்டில் சுண்டக்காமுத்தூா் வாா்டு அலுவலகம், மத்திய மண்டலம் 32-ஆவது வாா்டில் சங்கனூா் நாராயணசாமி வீதி சிறுவா் பூங்கா, 80-ஆவது வாா்டில் ஒக்கிலியா் காலனி பள்ளி.