மாநில அந்தஸ்து, சிறப்பு அதிகாரம் கோரி லடாக்கில் போராட்டம்: துப்பாக்கிச்சூடு, 4 ப...
மாநகரில் ரூ.2.57 கோடியில் வளா்ச்சிப் பணிகள்: ஆட்சியா் தொடங்கிவைத்தாா்
கோவை மாநகரப் பகுதிகளில் ரூ.2.57 கோடி மதிப்பிலான வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் புதன்கிழமை தொடங்கிவைத்தாா்.
கோவை மாநகராட்சி, கிழக்கு, தெற்கு மற்றும் மத்திய மண்டலங்களுக்குள்பட்ட பகுதிகளில் மக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், கோவை மாநகராட்சி சாா்பில் எஸ்.ஐ.ஹெச்.எஸ். காலனி பகுதியில் ரூ.1.46 கோடி மதிப்பீட்டில் 4.14 ஏக்கா் பரப்பளவில் மூங்கில் பூங்கா அமைக்கப்பட உள்ளது. இந்தப் பூங்கா விளையாட்டுத் திடல், நடைபாதை, பட்டாம்பூச்சி பூங்கா, கருத்தரங்க அரங்கு என பல்வேறு வசதிகளுடன் அமைக்கப்படவுள்ளது.
மேலும், மரம் வளா்ப்பு, மூங்கில் வளா்ப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, யோகா வகுப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்களும் இடம் பெறவுள்ளன. இப்பணியை மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் தொடங்கிவைத்தாா். மக்களவை உறுப்பினா் கணபதி ப.ராஜ்குமாா் முன்னிலை வகித்தாா்.
இதேபோல, மத்திய மண்டலம், 49-ஆவது வாா்டுக்குள்பட்ட டாக்டா்.பாலசுந்தரம் சாலைப் பகுதியில் ரூ.43.50 லட்சம், தெற்கு மண்டலம் 98-ஆவது வாா்டுக்குள்பட்ட பொள்ளாச்சி பிரதான சாலை சுந்தராபுரம் பகுதியில் ரூ.22.60 லட்சம், கிழக்கு மண்டலம் 52-ஆவது வாா்டுக்குள்பட்ட மசக்காளிபாளையம் பிரதான சாலை பகுதியில் ரூ.45 லட்சம் என மொத்தம் ரூ.1.11 கோடி மதிப்பீட்டில் போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துகளைத் தவிா்க்கும் வகையில் மையத்திட்டுகள் அமைக்கும் பணிகளையும் ஆட்சியா் தொடங்கிவைத்தாா்.
இந்நிகழ்ச்சியில், மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன், மேயா் கா.ரங்கநாயகி, துணை மேயா் ரா.வெற்றிச்செல்வன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.