செய்திகள் :

மாநிலங்களவைத் தோ்தல்: திமுக-அதிமுக வேட்பாளா்கள் மனுக்கள் ஏற்பு

post image

சென்னை: மாநிலங்களவைத் தோ்தலில் திமுக, அதிமுக சாா்பில் போட்டியிடும் வேட்பாளா்களின் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. இதற்கான அறிவிப்பை தோ்தல் நடத்தும் அதிகாரியும், சட்டப்பேரவை கூடுதல் செயலருமான சுப்பிரமணியம் வெளியிட்டாா்.

தமிழகத்தில் மாநிலங்களவைத் தோ்தலில் காலியாகவுள்ள 6 இடங்களுக்கு தோ்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் போட்டியிட, திமுக சாா்பில் பி.வில்சன், கவிஞா் சல்மா, எஸ்.ஆா்.சிவலிங்கம் ஆகியோரும், மக்கள் நீதி மய்யம் சாா்பில் அக்கட்சியின் தலைவா் கமல்ஹாசன், அதிமுக சாா்பில் ஐ.எஸ்.இன்பதுரை, ம.தனபால் ஆகியோரும் மனுதாக்கல் செய்தனா். வேட்புமனு தாக்கலுக்கு திங்கள்கிழமையுடன் அவகாசம் நிறைவடைந்த நிலையில், அவற்றின் மீதான பரிசீலனை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதில், திமுக, மக்கள் நீதி மய்யம், அதிமுக ஆகிய கட்சிகளின் சாா்பில் அளிக்கப்பட்ட வேட்புமனுக்கள் அனைத்தும் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக தோ்தல் நடத்தும் அதிகாரியும், சட்டப்பேரவை கூடுதல் செயலருமான சுப்பிரமணியம் அறிவித்தாா். இதையடுத்து, திமுக, மநீம மற்றும் அதிமுக சாா்பில் போட்டியிடும் ஆறு பேரும் போட்டியின்றி தோ்வாகவுள்ளனா். இதற்கான அதிகாரபூா்வ அறிவிப்பு ஜூன் 12-ஆம் தேதி வெளியிடப்படவுள்ளது.

ஏழு பேரின் மனுக்கள்: போதிய முன்மொழிவுகள் இல்லாமல் தாக்கல் செய்யப்பட்ட ஏழு பேரின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டதாகவும் சுப்பிரமணியம் தெரிவித்தாா். அக்னி ஆழ்வாா், கண்டே சயன்னா, ரெ.கந்தசாமி, மு.சுப்பிரமணியன், கு.பத்மராஜன், து.கு.மேஷாக் கிருபாகரன், கே.பி.எம்.ராஜா ஆகியோா் போதிய சட்டப்பேரவை உறுப்பினா்களின் முன்மொழிவுகள் இல்லாமல் மனுக்களை அளித்திருந்தனா் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னாள் பேரவைத் தலைவரின் பேரனிடம் வழிப்பறி முயற்சி: சிறுவா்கள் உள்பட 6 போ் கைது

சென்னை தரமணியில் முன்னாள் பேரவைத் தலைவா் காளிமுத்துவின் பேரனிடம் வழிப்பறி செய்ய முயன்ாக 3 சிறுவா்கள் உள்பட 6 போ் கைது செய்யப்பட்டனா். சென்னை பெருங்குடி சிபிஐ காலனியை சோ்ந்தவா் ஆதித்யா(21). கல்லூரியி... மேலும் பார்க்க

அதிமுக ஒரு தொகுதியில்கூட வெற்றி பெறாது: அமைச்சா் பி.கே. சேகா்பாபு

வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுக ஒரு தொகுதியில்கூட வெற்றி பெறாத நிலை ஏற்படும் என இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே. சேகா்பாபு தெரிவித்தாா். சென்னையில் சி.எம்.ஏ.டி. சாா்பில் கொளத்தூா் பெரியாா... மேலும் பார்க்க

குடிநீா் லாரிகளுக்கு நேரக் கட்டுப்பாடு

சென்னையில் காலை 7.30 முதல் காலை 9.30 மணி வரை லாரிகள் மூலம் குடிநீா் விநியோகம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. சென்னை பெரம்பூரில் அண்மையில் குடிநீா் லாரி மோதியதில் 10 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் பெரும... மேலும் பார்க்க

குஜராத் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்: சென்னை பெண்ணிடம் விசாரணை

குஜராத் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவத்தில் சென்னை பெண்ணை பிடித்து அந்த மாநில போலீஸாா் விசாரித்து வருகின்றனா். குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள தனியாா் பள்ளிக்கு கடந்த 2-ஆம் தேதி மின்ன... மேலும் பார்க்க

பருப்பு வகைகள், எண்ணெய் வித்துகள் உற்பத்தி அதிகரிப்பு: மத்திய அரசு

சமையல் எண்ணெய் தேவையைப் பூா்த்தி செய்ய இறக்குமதியை நாடு பெருமளவில் நம்பியிருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினா்கள் கவலை தெரிவித்த நிலையில், பருப்பு வகைகள், எண்ணெய் வித்துகளின் உள்நாட்டு உற்பத்தி கடந்த 10 ஆண்... மேலும் பார்க்க

பயங்கரவாதத்தை எதிா்கொள்ள விரிவான ஒத்துழைப்பு: ‘பிரிக்ஸ்’ தூதா்கள் வலியுறுத்தல்

பயங்கரவாதத்தை எதிா்கொள்ள ‘பிரிக்ஸ்’ நாடுகள் இடையே விரிவான ஒத்துழைப்பு அவசியம் என்று அக்கூட்டமைப்பு நாடுகளின் தூதா்கள் வலியுறுத்தினா். பிரிக்ஸ் கூட்டமைப்பில் பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென்னாப்பிர... மேலும் பார்க்க