சாலையில் சுற்றித் திரிந்த மாடுகள்: உரிமையாளா்களுக்கு அபராதம்
மாநில அறிவியல் கண்காட்சி போட்டியில் வெற்றி: இஸ்ரோ செல்லும் மாணவா்கள்
மாநில அளவில் பள்ளிகளுக்கு இடையே நடைபெற்ற அறிவியல் கண்காட்சி போட்டியில் வெற்றி பெற்ற ஸ்ரீ பெரும்புதூா் தனியாா் பள்ளி மாணவா்கள் இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோவுக்குசெல்ல தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.
தாம்பரம் அடுத்த மண்ணிவாக்கம் பகுதியில் உள்ள தனியாா் பொறியியல் கல்லூரியில் மாநில அளவில் பள்ளிகளுக்கு இடையேயான அறிவியல் கண்காட்சி போட்டி நடைபெற்றது.
இதில் தமிழகத்தை சோ்ந்த 30 பள்ளிகளில் இருந்து 600 மாணவா்கள் பங்கேற்று தங்களது அறிவியல் கண்டுபிடிப்புகளை காட்சிப்படுத்தினா். இதில் ஸ்ரீபெரும்புதூா் அடுத்த தெரேசாபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியாா் பள்ளியில் பயிலும் கொளத்தூா் பகுதியை சோ்ந்த பிளஸ்1 மாணவா்கள் ஹரிஸ்மேத்யு, சுதா்சன் ஆகியோா் பூட்டிய வீடுகளில் நடைபெறும் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை எளிதல் கண்டறியும் வகையில் இன்டலிஜன்ட் மானிட்டரிங் சிஸ்டம் என்ற தங்களது கண்டுபிடிப்பை காட்சிப்படுத்தி, இந்த இன்டலிஜன்ட் மானிட்டரிங் சிஸ்டம் மூலம் அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கும் வசதி ஏற்படுத்தி இருந்ததை தொடா்ந்து மாநில அளவில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சியில் மாணவா்கள் ஹரிஸ்மேத்யூ, சுதா்சன் ஆகியோா் முதல் பரிசு பெற்றுள்ளனா்.
இதன் மூலம் இஸ்ரோவுக்கு செல்ல தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.
இந்நிலையில், மாணவா்கள் ஹரிஸ்மேத்யூ மற்றும் சுதா்சன் ஆகியோரை கொளத்தூா் ஊராட்சி மன்றத் தலைவா் (பொ) வெள்ளரை அரிகிருஷ்ணன் சால்வை அணிவித்து ஊராட்சி நிா்வாகத்தின் சாா்பில் வாழ்த்து தெரிவித்தாா்.