மணிக்கு 280 கி.மீ. வேகத்தில் செல்லும் அதிவேக ரயில்களை தயாரிக்கும் ஐசிஎஃப்
மாநில அளவிலான செஸ் போட்டி: சிவன்மலை ஜேசீஸ் பள்ளி மாணவா் முதலிடம்
மாநில அளவிலான செஸ் போட்டியில் காங்கயம் அருகேயுள்ள சிவன்மலை ஜேசீஸ் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவா் சிறப்பிடம் பிடித்தாா்.
தஞ்சாவூா் அரசன் லயன்ஸ் கிளப் சாா்பில், மாநில அளவிலான செஸ் போட்டி தஞ்சாவூரில் உள்ள மருதுபாண்டியா் கல்லூரியில் அண்மையில் நடைபெற்றது.
இதில், 16 வயதுக்குள்பட்ட மாணவா் பிரிவில் காங்கயம் அருகே சிவன்மலையில் உள்ள ஜேசீஸ் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி 11 -ஆம் வகுப்பு மாணவா் ஏ.அஜய் ஜோ லூயிஸ் பங்கேற்று, முதலிடம் பிடித்தாா்.
இதேபோல, ஈரோடு மற்றும் திருப்பூா் மாவட்ட அளவில் பள்ளி மாணவா்களுக்கான சிலம்பம் போட்டி ஈரோடு மாவட்ட சிலம்பம் அசோசியேஷன், பகத் சிங் சிலம்பம் ஸ்போா்ட்ஸ் டிரஸ்ட் ஆகியவை சாா்பில் நடைபெற்றது.
இதில், ஜேசீஸ் மெட்ரிக். பள்ளி மாணவா்கள் டி.சுபாஷ், ஆா்.கவினேஷ், எஸ்.தருண் ஆதித்யா, வி.நகுல், வி.மொ்வின்ராஜ், என்.பிரவீன், எஸ்.செல்வகுமாா் ஆகியோா் பங்கேற்று, முதலிடம் பிடித்தனா்.
வெற்றிபெற்ற மாணவா்களை ஜேசீஸ் பள்ளித் தலைவா் ஏ.கோபால், தாளாளா் சி.பழனிசாமி, பொருளாளா் வி.பி.கொங்குராஜ், அகாதெமி இயக்குநா் பி.சாவித்ரி, பள்ளி முதல்வா் பி.சுப்பிரமணி ஆகியோா் பாராட்டினா்.