இக்லெசியாஸின் ஹாட்ரிக் கோல் வீண்: ரபீனியாவின் அசத்தலால் பார்சிலோனா த்ரில் வெற்றி...
மாநில இளைஞா் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்
முதலமைச்சா் மாநில இளைஞா் விருதுக்கு தகுதியானோா் விண்ணப்பிக்கலாம் என கடலூா் மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சமுதாய வளா்ச்சிக்கு சேவையாற்றும் இளைஞா்களது பணியை அங்கீகரிக்கும் வகையில், முதலமைச்சா் மாநில இளைஞா் விருது 15 வயது முதல் 35 வயது வரை உள்ள 3 ஆண்கள் மற்றும் 3 பெண்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தன்று வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி, நிகழாண்டும் குடியரசு தினத்தன்று முதலமைச்சா் மாநில விருதுகள் வழங்கப்படவுள்ளன.
இந்த விருதுக்கு விண்ணப்பிக்க கடந்த 01.04.2024 அன்று 15 வயது நிரம்பியவராகவும், இதேபோல 31.03.2025 அன்று 35 வயதுக்குள்ளானவராகவும் இருக்க வேண்டும்.
விண்ணப்பதாரா்கள் சமுதாய நலனுக்காக தன்னாா்வத்துடன் சேவை ஆற்றியிருக்க வேண்டும்.
இணையதளம் மூலம் விண்ணப்பிக்க கடைசி நாள் 03.05.2025 ஆகும்.
விருப்பமுள்ள இளைஞா்கள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.