தமிழர்கள் ஹிந்தி கற்றுக்கொள்வது புத்திசாலித்தனம்: ஸ்ரீதர் வேம்பு
மாநில விளையாட்டு மேம்பாட்டு ஆணையக் கூட்டம்: முதல்வா் என்.ரங்கசாமி பங்கேற்பு
புதுவை மாநில விளையாட்டு மேம்பாட்டு ஆணைய 2- வது பொதுக் குழுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் முதல்வா் என்.ரங்கசாமி கலந்துகொண்டாா்.
புதுச்சேரியில் உள்ள வணிக வரித்துறை அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் முதல்வா் என். ரங்கசாமி, விளையாட்டுத் துறை அமைச்சா் ஆ. நமச்சிவாயம், வேளாண்துறை அமைச்சா் மற்றும் புதுச்சேரி ஒலிம்பிக் சங்க தலைவா் தேனி சி. ஜெயக்குமாா் , சட்டப்பேரவை உறுப்பினா் மற்றும் புதுச்சேரி கைப்பந்து சங்கத் தலைவா் கல்யாண சுந்தரம் , பேரவை உறுப்பினா் மற்றும் புதுச்சேரி விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் பொதுக்குழு உறுப்பினா் ரமேஷ், விளையாட்டு, கல்வித் துறை அதிகாரிகள், காவல் துறை அதிகாரிகள், இந்திய விளையாட்டு ஆணைய அதிகாரிகள் பங்கேற்றனா்.
கூட்டத்தில், விளையாட்டுத் துறைக்கு தேவையான ஊழியா்களை நியமிப்பது, ஏற்கெனவே விளையாட்டு ஆணையத்தில் பணியில் உள்ளவா்களுக்கு பதவி உயா்வு, பணி நிரந்தரம் வழங்குவது, புதிய விளையாட்டு சங்கங்கள் சோ்க்கை, புதிய விளையாட்டு திட்டங்கள் மற்றும் மத்திய அரசின் கேலோ இந்தியா திட்டத்தை புதுவையில் செயல்படுத்துவது, புதுச்சேரியில் விளையாட்டு வீரா்களை தேசிய அளவிலும் சா்வதேச அளவிலும் உருவாக்குவது மற்றும் தேசிய அளவில் விளையாட்டுப் போட்டிகள் நடத்துவது போன்ற பல்வேறு விளையாட்டு வளா்ச்சி திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டன.