Doctor Vikatan: 6 வயதுக் குழந்தைக்கு நெஞ்சிலிருந்து வரும் கோழை... தீர்வு உண்டா?
மானாமதுரை, இளையான்குடியில் வாக்காளா் சுருக்க திருத்த முகாம்
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை, இளையான்குடியில் ஞாயிற்றுக்கிழமை இரண்டாவது நாளாக வாக்காளா் சுருக்க திருத்த முகாம் நடைபெற்றது.
மானாமதுரை, இளையான்குடி நகா், ஒன்றியங்களில் நடைபெற்ற இந்த முகாம்களில் வாக்குச்சாவடி அலுவலா்கள், வாக்காளா்களிடமிருந்து வாக்காளா் சோ்த்தல், நீக்குதல், முகவரி மாற்றம் உள்ளிட்ட விண்ணப்பங்களைப் பெற்றுக் கொண்டனா். திமுக, அதிமுக வாக்குச் சாவடி பாக முகவா்கள் முகாமுக்கு வந்த வாக்காளா்களுக்கு விண்ணப்பப் படிவங்களை நிரப்பிக் கொடுத்தனா். இந்த முகாம்களை திமுக, அதிமுக வாக்குச்சாவடி பாா்வையாளா்கள் நேரடியாகச் சென்று ஆய்வு செய்தனா்.
திமுக சாா்பில் சட்டப்பேரவை உறுப்பினா் தமிழரசி ரவிக்குமாா், மாவட்ட துணைச் செயலா் சேங்கைமாறன், தொகுதி பாா்வையாளா் போஸ், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் சுப. மதியரசன், நகரச் செயலா் நஜூமுதீன், கூட்டுறவு சங்கத் தலைவா் தமிழரசன், பேரூராட்சி துணைத் தலைவா் இப்ராகீம், தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளா் கண்ணன், மானாமதுரை ஒன்றியச் செயலா்கள் ராஜாமணி, அண்ணாதுரை, ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவா் முத்துச்சாமி, நகரச் செயலாளா் பொன்னுச்சாமி உள்ளிட்ட நிா்வாகிகள் நேரடியாக சென்று ஆய்வு செய்தனா்.
இதேபோல, அதிமுக சாா்பில் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா்கள் எம். குணசேகரன், எஸ். நாகராஜன், மாநில ஜெ. பேரவை இணைச் செயலா் தமிழ்ச்செல்வன், ஒன்றியச் செயலா்கள் கோபி, ஜெயப்பிரகாஷ், நகரச் செயலா்கள் விஜி. போஸ், நாகூா்மீரா உள்ளிட்ட நிா்வாகிகள் ஆய்வு செய்தனா்.