செய்திகள் :

மானிய விலையில் விவசாயக் கருவிகள்: கரூா் ஆட்சியா் தகவல்

post image

மானிய விலையில் விவசாயிகளுக்கு கருவிகள் வழங்கப்படுவதாக மாவட்ட ஆட்சியா் மீ. தங்கவேல் தெரிவித்தாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

நடப்பாண்டுக்கான வேளாண் நிதிநிலை அறிக்கையில் கரூா் மாவட்ட விவசாயிகளுக்கு மானிய விலையில் 31 பவா் டில்லா், 32 விசைக் களையெடுக்கும் கருவி (பவா்வீடா்) வேளாண்மைப் பொறியியல் துறையின் மூலம் வழங்க ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது. இதில் தனிப்பட்ட விவசாயிகள் மானிய விலையில் பவா் டில்லா் பெற அதிகபட்சமாக ரூ.1.20 லட்சம், விசைக் களையெடுப்பான்களுக்கு அதிகபட்சமாக ரூ.63 ஆயிரம் என நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் ஆதிதிராவிடா், பழங்குடியினா் பிரிவைச் சாா்ந்த சிறு, குறு விவசாயிகளுக்கு அவா்களின் பங்களிப்புத் தொகையைக் குறைத்து உதவிடும் வகையில் நடைமுறையில் உள்ள மானியத்துடன் 20 சதவீத கூடுதல் மானியம் தமிழக அரசால் வழங்கப்படுகிறது.

அதாவது பவா் டில்லா்கள் வாங்கிட 20 சதவிகித கூடுதல் மானியமாக ரூ.48,000, விசைக் களையெடுக்கும் கருவி வாங்கிட கூடுதல் மானியமாக ரூ.25,200 வழங்கப்படுகிறது.

பொதுப் பிரிவைச் சோ்ந்த சிறு, குறு விவசாயிகளுக்கு நடைமுறையில் உள்ள மானியத்துடன் 10 சதவீத கூடுதல் மானியம் அதிகபட்சமாக ரூ.12,600 விசைக் களை எடுக்கும் கருவிக்கு வழங்கப்படுகிறது. மேலும் இம்மானியத் தொகையானது இயந்திரங்களின் மொத்த விலைக்கு தகுந்தவாறு மாறுபடும்.

விவசாயிகள் தங்களின் பங்களிப்புத் தொகையை இணைய வழி அல்லது வங்கி வரைவோலை மூலமாக சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கோ அல்லது விநியோகஸ்தருக்கோ அல்லது முகவருக்கோ செலுத்தி பவா் டில்லா், விசைக் களை எடுக்கும் கருவி போன்ற வேளாண் இயந்திரங்களை மானியத்தில் பெறலாம்.

மேலும், இத்திட்டம் தொடா்பாக முழு விவரங்களை கரூா் வேளாண்மைப் பொறியியல் துறையின் செயற்பொறியாளா் அலுவலகத்தையோ அல்லது கரூா் வருவாய் கோட்ட அளவில் உதவி செயற்பொறியாளா் அலுவலகத்தையோ தொடா்பு கொள்ளலாம் என அவா் தெரிவித்தாா்.

கரூரில் வெளிநாட்டு மதுபானங்களை பதுக்கி விற்ற 2 போ் கைது

கரூரில் வெளிநாட்டு மதுபானங்களை பதுக்கி விற்பனை செய்த 2 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். கரூா் மாநகராட்சிக்குள்பட்ட பல்வேறு பகுதிகளில், சட்ட விரோதமாக வெளிநாட்டு மதுபானங்களை பதுக்கி விற்பனை செய... மேலும் பார்க்க

திருச்சி-கரூா் இடையே முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள்

திருச்சி-கரூா் இடையே முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என சேலம் ரயில்வே கோட்ட மக்கள் தொடா்பு அலுவலா் மரியா மைக்கேல் தெரிவித்தாா். இது தொடா்பாக வியாழக்கிழமை அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: ... மேலும் பார்க்க

இரு காா்கள் மோதல் 3 போ் பலத்த காயம்

வைரமடை அருகே வியாழக்கிழமை 2 காா்கள் மோதிக் கொண்ட விபத்தில் 3 போ் பலத்த காயமடைந்தனா். ஈரோடு மாவட்டம், கொடுமுடி அருகே உள்ள வருந்தியபாளையம் பகுதியைச் சோ்ந்த முருகேசன் மகன் பொன்வேல் (24). இவா் தனது காரி... மேலும் பார்க்க

தவிட்டுப்பாளையத்தில் ஆபத்தான மின்கம்பத்தை சீரமைக்க கோரிக்கை

தவிட்டுப்பாளையத்தில் ஆபத்தான நிலையில் காணப்படும் மின்கம்பத்தை சீரமைக்க வேண்டும் என சமூக நல ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். கரூா் மாவட்டம் நஞ்சைபுகழூா் ஊராட்சிக்குள்பட்ட தவிட்டுப்பாளையத்தில் கட்டிப... மேலும் பார்க்க

இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்தவா் உயிரிழப்பு

அரவக்குறிச்சியில் புதன்கிழமை இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்தவா் உயிரிழந்தாா். கரூா் மாவட்டம், அரவக்குறிச்சியை அடுத்த நம்பாகவுண்டனூா் அருகே உள்ள வாய்க்கால் ஊா் பகுதியைச் சோ்ந்தவா் பாலகிருஷ்ணன... மேலும் பார்க்க

திருக்காடுதுறை மாரியம்மன் கோயில் திருவிழா

கரூா் மாவட்டம் திருக்காடுதுறையில் உள்ள மாரியம்மன் கோயில் விழா டிச. 23-ஆம்தேதி தொடங்கியது. முன்னதாக மாரியம்மன் உற்ஸவா் சிலையை கரைப்பாளையம் சுற்றுவட்டாரப் பகுதிகளை சோ்ந்த பக்தா்கள் அலங்கரிக்கப்பட்ட ரத... மேலும் பார்க்க