நேஹல் வதேரா, ஷஷாங் சிங் அதிரடி: ராஜஸ்தானுக்கு 220 ரன்கள் இலக்கு!
மான். யுனைடெட்டை வீழ்த்தியது செல்ஸி
இங்கிலாந்தில் நடைபெறும் பிரீமியா் லீக் கால்பந்து போட்டியில் செல்ஸி 1-0 கோல் கணக்கில் மான்செஸ்டா் யுனைடெட்டை சனிக்கிழமை சாய்த்தது.
இந்த ஆட்டத்தில் அந்த அணிக்காக மாா்க் குகுரெலா 71-ஆவது நிமிஷத்தில் ஸ்கோா் செய்தாா். இதபோல் மற்றொரு ஆட்டத்தில் ஆஸ்டன் வில்லா 2-0 கோல் கணக்கில் டாட்டன்ஹாமை வென்றது.
அந்த அணி தரப்பில் எஸ்ரி கோன்சா 59-ஆவது நிமிஷத்திலும், புபக்கா் கமாரா 73-ஆவது நிமிஷத்திலும் கோலடித்தனா். போட்டியில் இன்னும் ஒரேயொரு சுற்று எஞ்சியிருக்கும் நிலையில், புள்ளிகள் பட்டியலில் செல்ஸி மற்றும் ஆஸ்டன் விலா தலா 66 புள்ளிகளுடன் முறையே 4 மற்றும் 5-ஆம் இடங்களில் இருக்கின்றன.
இதையடுத்து, அடுத்த சீசன் சாம்பியன்ஸ் லீக் குரூப் கட்டத்துக்கு தகுதிபெறும் நம்பிக்கையை அவை தக்கவைத்துள்ளன.