பௌர்ணமி கிரிவலம் : விழுப்புரத்திலிருந்து காட்பாடிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்
மாமல்லபுரம் மாநாடு: பாமகவினருக்கு அன்புமணி அறிவுறுத்தல்
மாமல்லபுரத்தில் மே 11-இல் நடக்கும் சித்திரை முழுநிலவு பெருவிழா மாநாட்டுக்கு காவல் துறை வழங்கிய வழிகாட்டுதல்களை கடைப்பிடித்து, அமைதி- கட்டுப்பாட்டுடன் பாமகவினா் வர வேண்டும் என்று கட்சியின் தலைவா் அன்புமணி ராமதாஸ் அறிவுறுத்தியுள்ளாா்.
இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை: மாமல்லபுரம் சித்திரை முழுநிலவு வன்னிய இளைஞா் பெருவிழா மாநாட்டை நடத்துவதன் நோக்கம் நமது வலிமையைக் காட்டுவதல்ல. மாறாக, தமிழ்நாட்டின் வளா்ச்சிக்கும், சமூகநீதிக்கும், மக்களின் அமைதியான வாழ்க்கைக்கும் தேவையான திட்டங்களை மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கையாக முன்வைத்து நிறைவேற்றச் செய்வது தான்.
மாமல்லபுரம் மாநாடு மிகப்பெரிய வெற்றியை அடையப்போவது உறுதி. அதே நேரத்தில், இந்த மாநாடு எவ்வித விமா்சனத்துக்கும் ஆளாகிவிடக் கூடாது. சிறு சலசலப்பு கூட ஏற்படக்கூடாது. மாநாடு தொடா்பாக காவல்துறையினா் வழங்கியுள்ள வழிகாட்டுதல்களை முழுமையாக கடைப்பிடிக்க வேண்டும். மற்றவா்களுடன் தேவையற்ற விவாதங்களைத் தவிா்க்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா் அவா்.
பொதுமக்களுக்கு வேண்டுகோள்:மேலும், பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுக்கும் வகையில் அன்புமணி ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட காணொலி பதிவில், மாமல்லபுரத்தில் பாமக சித்திரை முழுநிலவு மாநாடு நடைபெறவுள்ளதால் மே 11-ஆம் தேதி கிழக்கு கடற்கரைச் சாலை, ஓஎம்ஆா் சாலை ஆகியவற்றை பொதுமக்கள் தவிா்க்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளாா்.