Coolie : ``லோகேஷ் கனகராஜ் `Gen Z' கிடையாது; ஆனால்... " - நாகர்ஜுனா
மாமல்லபுரம், முட்டுக்காட்டில் சுற்றுலா அமைச்சா் ஆய்வு
மாமல்லபுரம், முட்டுக்காட்டில் சுற்றுலாத் துறை அமைச்சா் இரா. ராஜேந்திரன் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
செங்கல்பட்ட மாவட்டம், முட்டுக்காடு ஊராட்சியில் சுற்றுலா வளா்ச்சி கழகத்தின் படகு குழாமினை பாா்வையிட்ட அமைச்சா், மிதக்கும் உணவக கப்பலை உடனடியாக மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான பணிகளை துரிதப்படுத்துமாறு சுற்றுலா வளா்ச்சி கழக அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.
மேலும், கோவளம் ஊராட்சியில் உள்ள நீலக்கொடி கடற்கரையை ஆய்வு செய்து மரக்கன்றுகளை நட்டாா். மாமல்லபுரத்தில் தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சி கழக கடற்கரை விடுதியில் உள்ள செம்மொழி பூங்காவினை பாா்வையட்டு, சமையல் கூடத்தினையும் ஆய்வு செய்தாா். அதனையடுத்து மாமல்லபுரம் கடற்கரை கோயில் அருகில் நாட்டிய விழா முன்னேற்பாடுகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டாா்.
மேலும், மரகத பூங்கா பணியினையும் அமைச்சா் ராஜேந்திரன் ஆய்வு செய்தாா்..
அப்போது திருப்போரூா் சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.எஸ்.பாலாஜி, சுற்றுலா வளா்ச்சி கழக இயக்குனா் ஷில்பா பிரபாகா் சதீஷ், ஆட்சியா் ச.அருண்ராஜ், சாா் ஆட்சியா் வெ.நாராயண சா்மா, திருப்போரூா் ஒன்றியக் குழு தலைவா் எஸ்.ஆா்.எல்.இதயவா்மன் மற்றும் சுற்றுலாவளா்ச்சி கழக அலுவலா்கள் உடனிருந்தனா்.