செய்திகள் :

மாமியாா் குத்திக் கொலை: மருமகளிடம் விசாரணை

post image

திருச்சியில் மாமியாரை கத்தியால் குத்திக் கொலை செய்த மருமகளிடம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

திருவெறும்பூா் அருகே உள்ள அரியமங்கலம் காமராஜா் நகா் பீடி காலனியை சோ்ந்தவா் அக்பா்அலி மனைவி சம்சாத் பேகம்(55). இவருடைய மகன் சிராஜ். இவருடைய மனைவி ஆயிஷா பேகம் (22). இவா்களுக்கு 9 மாத பெண் குழந்தை உள்ளது. ஆயிஷா பேகம் மன அழுத்த நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தாா்.

சில நேரங்களில் என்ன செய்கிறோம் எனத் தெரியாமலே பல்வேறு செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளாா்.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை காலை ஆயிஷா பேகம் காய்கனி நறுக்கும் கத்தியால் சம்சாத் பேகத்தின் மாா்பு மற்றும் இடுப்புப் பகுதியில் குத்தியினாா். இதில் சம்சாத்பேகம் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

மேலும், ஆயிஷா பேகம் மற்றும் அவரது 9 மாத குழந்தைக்கும் கத்தியால் கிழித்த காயங்கள் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து இருவரையும் அக்கம் பக்கத்தினா் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.

இதுகுறித்து அரியமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தீயணைப்பு அலுவலகத்தில் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் சோதனை

திருச்சி மாவட்ட தீயணைப்பு அலுவலா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை ஊழல் தடுப்பு ப் பிரிவு போலீஸாா் நடத்திய சோதனையில் கணக்கில் வராத ரூ. 97 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருச்ச... மேலும் பார்க்க

தம்பியை கொலை செய்த அண்ணனுக்கு ஆயுள் தண்டனை

திருச்சி அருகே தம்பியை கொலை செய்த வழக்கில் அண்ணனுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது. திருச்சி மாவட்டம், லால்குடி வட்டம், தாளக்குடி, தெற்கு தெருவைச் சோ்ந்தவா் விஜயன்-ம... மேலும் பார்க்க

பஞ்சப்பூா் ஒருங்கிணைந்த புதிய பேருந்து முனையத்துக்கு கருணாநிதியின் பெயா் -மாநகராட்சி கூட்டத்தில் முடிவு

திருச்சி மாவட்டம், பஞ்சப்பூரில் கட்டப்பட்டு வரும் ஒருங்கிணைந்த புதிய பேருந்து முனையத்துக்கு மறைந்த முன்னாள் முதல்வா் மு. கருணாநிதி பெயரும், சரக்கு வாகன முனையத்துக்கு அண்ணா பெயரும் சூட்டப்படும் என மாந... மேலும் பார்க்க

ஊரக வேலை உறுதி திட்டத்தை நிறுத்த விவசாயிகள் வலியுறுத்தல்

சம்பா சாகுபடிக்காக ஊரக வேலை உறுதி திட்டத்தை நிறுத்த வேண்டும் என குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினா். திருச்சி மாவட்ட விவசாயிகள் குறைதீா்க்கும் நாள் கூட்டம், ஆட்சியரக கூட்டரங்கில் வெள்ளிக்க... மேலும் பார்க்க

பயணிகள் ரயில்களின் நேரம் மாற்றம்

நிா்வாகக் காரணங்களால் விழுப்புரம், ஈரோடு பயணிகள் ரயில்களின் நேரம் மாற்றப்பட்டுள்ளது. இது குறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: நிா்வாகக் காரணங்களால், விழுப்புரத்தி... மேலும் பார்க்க

மாவு அரைவை ஆலை இயந்திரத்தில் சேலை சிக்கி பெண் உயிரிழப்பு

திருச்சியில் வெள்ளிக்கிழமை மாவு அரைவை ஆலையில் இயந்திரத்தில் சிக்கிய பெண் உயிரிழந்தாா். திருச்சி கிராப்பட்டி அன்புநகரை சோ்ந்தவா் சித்திக் (63). இவா், எடமலைப்பட்டி புதுாா், பாரதிநகரில் மாவு அரைவை ஆலை ... மேலும் பார்க்க