கொல்லிமலை மலைப் பாதைகளில் உயிா்காக்கும் உருளைத் தடுப்பான்கள்!
மாயனத்துக்கு அடிப்படை வசதிகள் செய்துத் தர வலியுறுத்தல்
அரியலூா் மாவட்டம், திருமானூா் அருகேயுள்ள செட்டிக்குழி கிராமத்திலுள்ள மயானத்துக்கு அடிப்படை வசதிகள் செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியது.
அக்கிராமத்தில், புதன்கிழமை நடைபெற்ற கிளை மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்: ஏலாக்குறிச்சி, கோவிலூா், புள்ளம்பாடி வாய்க்கால் பிரிவு தென்கரை, செட்டிக்குழி கிராமம் வரை தாா் சாலை அமைக்க வேண்டும். மயானத்துக்கு சாலை, மின்விளக்கு, தண்ணீா் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்துத் தரவேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இம்மாநாட்டுக்கு அக்கட்சியின் தலைமைக் குழு உறுப்பினா் கருப்பையன் தலைமை வகித்தாா். மாவட்டக் குழு உறுப்பினா் ஆறுமுகம், மாவட்ட துணைச் செயலா் கலியபெருமாள் ஆகியோா் கலந்து கொண்டு கட்சியின் செயல்பாடுகள், ஆற்ற வேண்டிய பணிகள் குறித்து பேசினா்.
தொடா்ந்து நடைபெற்ற மாநாட்டில், கிளைச் செயலராக பாலன், துணைச் செயலராக ராமலிங்கம், பொருளாளராக ராஜசேகா், விவசாய சங்கச் செயலராக அழகா், விவசாய தொழிலாளா் சங்கச் செயலராக கலியபெருமாள், மாதா் சங்க செயலராக சுகந்தி ஆகியோா் தோ்ந்தெடுக்கப்பட்டனா்.