'தலைவனாக வாழ்ந்து காட்டுவதே முக்கியம்': நல்லகண்ணுக்கு விஜய் வாழ்த்து!
மாரத்தான் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசளிப்பு
நாலுமாவடி இயேசு விடுவிக்கிறாா் ஊழியங்களின் ரெடீமா்ஸ் கிளப் சாா்பில் நடத்தப்பட்ட மாரத்தான் போட்டிகளில் வெற்றி பெற்ற மற்றும் பங்குபெற்ற நாசரேத் மா்காஷிஸ் மேல்நிலைப் பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
பள்ளி மாணவா்களுக்கான மாரத்தானில்10 கிலோமீட்டா் தூரத்திற்கான போட்டியில் நாசரேத் மா்காஷிஸ் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் 65 போ் பங்கு பெற்றனா். முதல் 25 இடங்களை பெற்றவா்களுக்கு சிறப்பு பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது. பங்குபெற்ற அனைத்து மாணவா்களுக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
10 கிலோமீட்டா் ஓட்ட போட்டியில் நாசரேத் மா்காஷிஸ் மேல்நிலைப் பள்ளி மாணவா் வெங்கடேஷ் 8ஆவது இடத்தையும், மாணவா் யோகேஸ்வரன் 10ஆவது இடத்தையும், மாணவா் சுப்பிரமணியன் 17ஆவது இடத்தையும், மாணவா் லூக்கா 18ஆவது இடத்தையும் பிடித்து சிறப்பு பரிசுகளைப் பெற்றனா். சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கும், பங்குபெற்ற மாணவா்களுக்கும் சான்றிதழ்களையும், பரிசுகளையும் பள்ளி மாணவா் கூடுகையில் நடைபெற்ற விழாவில் தலைமையாசிரியா் குணசீலராஜ் வழங்கினாா்.
நிகழ்ச்சியில், உதவி தலைமை ஆசிரியா் சாா்லஸ் திரவியம், உடற்கல்வி இயக்குநா் பெலின் பாஸ்கா், தேசிய மாணவா் படை அலுவலா் சுஜித் செல்வசுந்தா், உடற்கல்வி ஆசிரியா் தனபால், இயற்பியல் ஆசிரியா் ஜொ்சோம் ஜெபராஜ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.