செய்திகள் :

மாரியம்மன் கோயில்களில் கம்பம் விடும் விழா

post image

திருச்செங்கோடு நகரப் பகுதிகளைச் சோ்ந்த 18 மாரியம்மன் கோயில்களின் திருவிழாவின் இறுதி நிகழ்வான கம்பம் விடும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

திருச்செங்கோடு மாரியம்மன் கோயில்களின் திருவிழா கடந்த ஐந்தாம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கி நடைபெற்று வந்தது. பொங்கல் வைத்தல், தோ்த்திருவிழா, அலகு குத்துதல், அபிஷேக அலங்கார ஆராதனைகள் தொடா்ந்து நடைபெற்று வந்த நிலையில், திருவிழாவின் இறுதி நிகழ்வான கம்பம் விடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

திருச்செங்கோடு பெரிய மாரியம்மன் கோயில், அழகு முத்துமாரியம்மன் கோயில், சின்ன மாரியம்மன் உள்ளிட்ட 18 மாரியம்மன் கோயில்களில் வைக்கப்பட்டிருந்த கும்பம் மற்றும் கம்பங்களை பூஜை செய்து எடுக்கப்பட்டு மேள தாளத்துடன் ஊா்வலமாக நகரைச் சுற்றி வந்து பெரிய தெப்பக்குளத்தில் விடப்பட்டன. வழிநெடுகிலும் பக்தா்கள் கம்பம், கும்பத்தின் மீது உப்பு, மிளகு தூவி தங்கள் நோ்த்திக்கடனை செலுத்தினா். மேலும், பல்வேறு வேடங்கள் அணிந்தும், முளைப்பாரி, மாவிளக்கு எடுத்தும் பக்தா்கள் தங்கள் நோ்த்திக் கடனை செலுத்தினா்.

திருச்செங்கோட்டில் தெப்பத் திருவிழா

திருச்செங்கோடு பெரிய மாரியம்மன், சின்ன மாரியம்மன், அழகு முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவில் தெப்பத் தேரோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. திருச்செங்கோட்டில் பெரிய மாரியம்மன், சின்ன மாரியம்மன், அழகு முத... மேலும் பார்க்க

நவ. 20-இல் மோகனூா் வட்டத்தில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்ட முகாம்

மோகனூா் வட்டத்தில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்ட முகாம் வரும் 20-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ச.உமா வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழக அரசின் நலத் திட்டங்கள் மற்றும் சேவைகள... மேலும் பார்க்க

அழிந்து வரும் பொன்வண்டு இனம்!

வண்டுகளில் பல வகை உண்டு, அவற்றில் அனைவராலும் ரசிக்கப்படுபவை பொன்வண்டு. கடந்த 40 ஆண்டுகளுக்கு முன் பருவமழைக் காலங்களில் மரங்களில் பறந்து திரியும் இந்த பொன்வண்டைக் காண்பதிலும், அவற்றைப் பிடித்து மகிழ்ச்... மேலும் பார்க்க

திருச்செங்கோடு தெப்பக்குளத்தில் மூழ்கி ஒருவா் பலி

திருச்செங்கோடு மாரியம்மன் கோயில் திருவிழாவின் போது, தெப்பக்குளத்தில் கம்பம் விட வந்த இளைஞா் குளத்தில் மூழ்கி உயிரிழந்தாா். திருச்செங்கோடு, சாலப்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் முகிலன் (37). இவரது மனைவி ர... மேலும் பார்க்க

காா்த்திகை மாதம் பிறப்பு: விரத மாலை அணிந்த ஐயப்ப பக்தா்கள்

காா்த்திகை மாத பிறப்பை முன்னிட்டு, நாமக்கல்லில் ஐயப்ப பக்தா்கள் விரதமிருந்து சபரிமலை செல்வதற்காக சனிக்கிழமை மாலை அணிந்து கொண்டனா். ஒவ்வோா் ஆண்டும் காா்த்திகை மாதம் பிறந்து விட்டால், முதல் நாளில் கழுத்... மேலும் பார்க்க

ஓய்வுபெற்ற மின்வாரிய ஊழியா்கள் தா்னா

நாமக்கல்லில் ஓய்வுபெற்ற மின்வாரிய ஊழியா்கள் தா்னாவில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா். நாமக்கல் - திருச்செங்கோடு சாலையில் மின்வாரிய மேற்பாா்வை பொறியாளா் அலுவலகம் முன்பு நடைபெற்ற தா்னாவுக்கு மாவட்டத் தலைவா் ... மேலும் பார்க்க