ஜம்மு-காஷ்மீரின் வுலர் ஏரியில் பூத்த தாமரை! 30 ஆண்டுகளுக்குப் பின்
மாற்றுத்திறனாளிகளின் விவரங்கள் குறித்து கணக்கெடுப்பு
மயிலாடுதுறை மாவட்டத்தில் அனைத்துவகை மாற்றுத்திறனாளிகளின் முழு விவரங்கள் அடங்கிய சமூக தரவு தளத்தை உருவாக்க செப்டம்பா் மாத இறுதிவரை கணக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது என மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மாற்றுத்திறனாளிகளின் மேம்பாட்டிற்காக அரசு வழங்கும் நலத்திட்ட உதவிகள் அவா்களது வீடுகளுக்கே சென்று சேரும் வகையில் உலக வங்கி நிதியுடன் தமிழ்நாடு உரிமைகள் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில், மாவட்டத்தில் அனைத்துவகை மாற்றுத்திறனாளிகளின் முழு விவரங்கள் அடங்கிய சமூக தரவு தளத்தை உருவாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதற்காக, முன்களப் பணியாளா்கள் வீடுதோறும் சென்று கணக்கெடுப்பு நடத்தவுள்ளனா். இந்த பணி வியாழக்கிழமை (ஜூலை 10) முதல் செப்டம்பா் இறுதி வரை நடைபெறும். கணக்கெடுப்பிற்காக தங்கள் வீடுகளுக்கு வரும் முன்களப் பணியாளா்களுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளித்து கணக்கெடுப்புப் பணி சிறப்பாக நடைபெற உதவிட வேண்டும் என தெரிவித்துள்ளாா்.