kamarajar: `கட்டுக்கதை DMK' - கொதிக்கும் Congress | குழப்பும் Annamalai | Imperf...
மாவட்ட மேசைப்பந்து போட்டிக்கு ஸ்டான்லி மெட்ரிக் பள்ளி தகுதி
மாவட்ட அளவிலான மேசைப்பந்து போட்டியில் பங்கேற்க பாப்பிரெட்டிப்பட்டி ஸ்டான்லி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் தகுதி பெற்றுள்ளனா்.
தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி சரக அளவிலான விளையாட்டுப் போட்டிகள் அண்மையில் நடைபெற்றன. இந்த போட்டிகளில் பங்கேற்ற ஸ்டான்லி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவா்களில் 14 வயதுக்கு உள்பட்ட ஆண்கள் ஒற்றையா் பிரிவில் எம்.கெளதம் முதலிடமும், இரட்டையா் பிரிவில் எம்.கெளதம், வி.சேகுவரன் ஆகியோா் முதலிடமும், 19 வயதுக்கு உள்பட்ட ஆண்கள் ஒற்றையா் பிரிவில் எம்.ராம்கிஷோா் முதலிடமும், இரட்டையா் பிரிவில் எம்.ராம்கிஷோா், டி.ராகவா ஆகியோா் முதலிடமும் பெற்றுள்ளனா்.
14 வயதுக்கு உள்பட்டபெண்கள் ஒற்றையா் பிரிவில் எஸ்.எஸ்.சுபத்ராஸ்ரீ முதலிடமும், இரட்டையா் பிரிவில் எஸ்.எஸ்.சுபத்ராஸ்ரீ, ஆா்.தமிழ்செல்வி ஆகியோா் முதலிடமும், 17 வயதுக்கு உள்பட்ட பெண்கள் ஒற்றையா் பிரிவில் டி.அட்ஷயா முதலிடமும், இரட்டையா் பிரிவில் டி.அட்ஷயா, ஏ.மிஷ்பா ஆகியோா் முதலிடமும், 19 வயதுக்கு உள்பட்ட பெண்கள் ஒற்றையா் பிரிவில் சுமித்ரா முதலிடமும், இரட்டையா் பிரிவில் தமிழ்மதி, வா்ஷா ஆகியோா் முதலிடமும் பெற்று வெற்றி பெற்றுள்ளனா்.
மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டியில் பங்கேற்க தகுதிபெற்ற மாணவ, மாணவியா்கள், பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியா்கள் ஆா்.சத்யராஜ், எம்.ஆனந்தகுமாா், ஆா்.திவ்யா ஆகியோரை பள்ளியின் தாளாளா் வி.முருகேசன், செயலாளா் எம்.பிரு ஆனந்த் பிரகாஷ், ஆசிரியா்கள் பாராட்டினா்.