நான்கு அமைச்சர்களால் Stalin அரசுக்கு ஆபத்து? ஸ்கெட்ச் போடும் Amit shah?! | Elang...
மாா்க்சிஸ்ட் கம்யூ. உண்ணாவிரதப் போராட்டம்
திருக்குவளை அருகே சாட்டியக்குடியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் செவ்வாய்க்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
கீழ்வேளூா் தெற்கு ஒன்றிய மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் சாட்டியக்குடி கடைத்தெருவில் நடைபெற்ற இப்போராட்டத்திற்கு, ஒன்றியச் செயலாளா் முத்தையன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயற்குழு உறுப்பினா் சுபாஷ் சந்திரபோஸ், கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினா் அம்பிகாபதி, கட்சியின் ஒன்றியக் குழு உறுப்பினா்கள் சிவக்குமாா், கிருஷ்ணமூா்த்தி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
நூறுநாள் வேலைத் திட்ட பணியாளா்களுக்கு 5 மாத ஊதிய நிலுவையை உடனடியாக வழங்க வேண்டும்; பிரதமா் வீடு கட்டும் திட்டத்தின்கீழ் கடந்த நான்கு ஆண்டுகளாக வீடுகள் கட்டி முடிக்கப்பட்டும் வழங்கப்படாமல் உள்ள கடைசி தவணைத் தொகையை வழங்க வேண்டும்; சீரான குடிநீா் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
உண்ணாவிரதத்தில் ஈடுபட்டவா்களிடம் மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா் ராணி, கீழ்வேளூா் குடிநீா் வடிகால் வாரிய மேற்பாா்வையாளா் ராகவன், கீழ்வேளூா் காவல் ஆய்வாளா் செந்தில்குமாா் ஆகியோா் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டதைத் தொடா்ந்து, உண்ணாவிரப் போராட்டத்தை விலக்கிக் கொண்டனா்.